சந்தனக் கடத்தல் வீரப்பனை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அவரது மகள் சினிமாவில் நடிகையாக வலம் வர காத்திருக்கிறார். சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு வித்யாராணி, விஜயலட்சுமி என இரு மகள்கள் உள்ளனர். வீரப்பனின் இளைய மகளான விஜயலட்சுமி, தற்போது சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.
அவர் நடிக்க உள்ள படத்திற்கு "மாவீரன் பிள்ளை' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை கே.என்.ஆர்.ராஜா இயக்குகிறார். அவரே கதாநாயகனாக நடிக்கிறார். படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி, சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. போஸ்டரில், வீரப்பனின் மகள் விஜயலட்சுமி துப்பாக்கி ஏந்திய படி நிற்கிறார். போஸ்டரில் உள்ள வீரப்பனின் மகள் புகைப்படத்தையும், வீரப்பன் துப்பாக்கி ஏந்திய புகைப்படத்தையும் ஒப்பிட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டீசரில், விஜயலட்சுமி கிராமப்புற பெண்களுக்கு தற்காப்புக் கலை பயிற்சிகளை கற்றுத் தருகிறார். மேலும், மது ஒழிப்பு, தண்ணீர் பிரச்னைகள் குறித்தும் படத்தில் அவர் நடித்துள்ள காட்சிகள் டீசரில் இடம்பெற்றுள்ளன. இது குறித்து அவர் பேசும் போது.... ""சமூக விழிப்புணர்வு எந்தளவுக்கு முக்கியம் என்பதை உணர்ந்திருக்கிறேன். அதை என்னால் ஆன முயற்சியாக சொல்ல வருகிறேன்'' என்றார்.ராதாரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இசை - ரவிவர்மா. ஒளிப்பதிவு - மஞ்சுநாத். படத்தொகுப்பு - ஜூலின். தருமபுரி, தில்லி பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,720 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!!

போர் நிறுத்தம்! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,600 புள்ளிகள் உயர்வு!
கச்சா எண்ணெய் விலை 15% சரிவு! டிரம்ப்பின் போர் நிறுத்த அறிவிப்பு எதிரொலி!!

மகாராஷ்டிரத்தைக் காட்டிலும் புதுவையில் மகளிா் உரிமைத் தொகை அதிகம்: கே.அண்ணாமலை
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


