ஆர். கே. சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் " வேட்டைநாய்'. இப்படத்தின் மூலம் ரசிகர்களின் பரவலான கவனத்துக்கு வந்திருக்கிறார் விஜித் சரவணன். வில்லன் ராம்கியின் கூடவே பயணிக்கும் கதாபாத்திரத்தில் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பை தந்து கவனம் ஈர்க்கிறார். இது குறித்து அவர் பேசும் போது....
""சினிமாக்காரனுக்கு கிளிசரின் போடாமல் கண்ணீர் வழிகிற நிமிடங்கள் இருக்கே... அது ரொம்பவே துயரமானது. ஏனென்றால் அது உண்மையான கண்ணீரா... இல்லை வெறும்
நடிப்பா... என்கிற சந்தேகம் ஒரு விநாடி எல்லாருடைய மனதிலும் எட்டிப் பார்த்து விட்டுப் போகும். வாய்ப்புகள் என்னைத் தேடி வந்ததா... நான் தேடிப் போகவில்லையா... என்பதை இப்போது கணக்குப் போட்டு பார்க்க முடியாது. பெரும் கனவு, லட்சியம் என கோடம்பாக்கத்துக்கு ஓடோடி வந்த நாள்கள் நினைவில் நிழலாடுகின்றன. எல்லா இடங்களிலும் சின்ன சின்ன தோல்விகள். இது எனக்கு ஒன்பதாவது படம்.
சமூகச் சூழல்களின் துரத்தல் ஒரு புறம். சிதைந்து விடாத சினிமா கனவு ஒரு புறம். இந்த இரண்டுக்குமான போராட்டங்களை வார்த்தைகளில் சொல்லி விட முடியாது. அதை வாழ்ந்துப் பார்த்தால்தான் தெரியும். இத்தனை வருட போராட்டங்களுக்குப் பின் இப்போதுதான் இருக்கை கொடுத்திருக்கிறது காலம். இயக்குநர் சொன்னதை உள்வாங்கி எனது நடிப்பை வெளிப்படுத்தினேன். சினிமாவில் இயங்க வேண்டும் என்பதுதான் என் ஆவல். அதற்காக எனக்கு பொருந்துகிற எந்த கதாபாத்திரம் வந்தாலும், ஏற்றுக் கொள்வேன்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருப்பம் தரும் தினப்பலன்!

பாஜகவின் கடும் சவாலை எதிா்கொள்ளும் திமுக

சிதம்பரம் தொகுதி நிலவரம்: தில்லையை தக்க வைக்குமா அதிமுக- இருமுனை போட்டியில் வெல்லப்போது யாா்?
வாக்காளரின் பொறுப்பும், கடமையும்...
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


