தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

தாத்தா  வழியில்  பேரன்...!

குத்துச் சண்டை போட்டிகளில்  முடி சூடா மன்னனாகத் திகழ்ந்த  முகமது அலியைத் தொடர்ந்து அவரது மகளான லைலா  குத்துச்  சண்டை போட்டிகளில் கலந்து கொண்டார்.

News image
Updated On :29 ஆகஸ்ட் 2021, 12:30 am


குத்துச் சண்டை போட்டிகளில்  முடி சூடா மன்னனாகத் திகழ்ந்த  முகமது அலியைத் தொடர்ந்து அவரது மகளான லைலா  குத்துச்  சண்டை போட்டிகளில் கலந்து கொண்டார். ஆனால் தந்தை போல்  புகழ் பெற முடியவில்லை.

முகமது அலி மரணமடைந்து ஐந்து ஆண்டுகளுக்குப்  பிறகு  அலியின் பேரன் நிக்கோ அலி வால்ஷ் குத்துச் சண்டை மேடை எறியதுடன்  வெற்றியும் பெற்றுள்ளார்.

22  வயதாகும் நிக்கோ அலி  தொழில் முறையாக இல்லாமல் குத்துச் சண்டை போட்டிகளில்  14  வயது முதலே கலந்து கொண்டு வந்தார்.  சென்ற  வாரம், அமெரிக்காவில்  ஓக்லஹோமாவில் நடந்த  குத்துச் சண்டையில் தொழில் ரீதியான குத்துச் சண்டை வீரராக நிக்கோ கலந்து கொண்டு எதிராளியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.   இந்த குத்துச் சண்டையையை ஏற்பாடு செய்தவர், முகம்மது வழியில் குத்துச் சண்டைகளை ஏற்பாடுகள்  செய்து வந்த பாபி அறும். "தாத்தா போல் பெயர் வாங்க கட்டாயம் முயற்சிப்பேன்..' என்கிறார் நிக்கோ அலி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.