காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

"செல்லுலார்' சிறைக்கூடம்

தாயகத்தின் சிறைக்கூடங்களிலேயே சுதந்திரப் போராட்ட வீரர்களை அடைத்து வைப்பது அத்துணை உசிதமல்ல என்று ஆங்கிலேய ஆட்சியாளர்கள் கருதினர்.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 12:30 am

ஜெ


தாயகத்தின் சிறைக்கூடங்களிலேயே சுதந்திரப் போராட்ட வீரர்களை அடைத்து வைப்பது அத்துணை உசிதமல்ல என்று ஆங்கிலேய ஆட்சியாளர்கள் கருதினர். அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு - அவ்வாறு ஒரே சிறையில் அடைத்தால் அவர்களுக்குள் தகவல் பரிமாற்றத்திற்கு ஏதுவாக இருக்கும் என்பதுடன் இதர கைதிகள் மத்தியில் சுதந்திரப் புரட்சிக் கருத்துகளைப் பரப்பவும் இயலும் என்று ஆங்கிலேயர் அஞ்சினர். எனவே, தொலைதூரப் பகுதியில், தீவாந்தரத் தண்டனையுடன் தனித்தனி அறையில் அடைத்திட எண்ணி அவர்களைக் கொண்டே உருவாக்கியதே "செல்லுலார்' சிறைக்கூடம். 

1906-இல் திறக்கப்பட்ட இந்த சிறைக்கூடத்தில் இறுதியில் மொத்தம் 693 தனித்தனி அறைகள் இருந்தன. 1889-இல் சுதந்திரப் போராட்டம் வலுப்பெற்றபோது புணேவிலிருந்து 80 புரட்சியாளர்கள் கைதியாக அந்தமான் வந்தடைந்தனர். 1909-1921 காலத்தில் போராட்ட அலை மீண்டும் எழும்பியபோது 132 பேர் தீவாந்தரத் தண்டனைக்காக இங்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 1932-38க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் மேலும் 379 போராட்டத் தியாகிகள் கைதிகளாக இங்கு வந்து சேர்ந்தனர். இவர்கள் பல்வேறு சதித் திட்டங்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு அந்தமான் தண்டனைக் குடியிருப்புக்கு கப்பலேற்றப்பட்டனர். 

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கைதிகள் பலர் அந்தமானுக்கு தண்டனைக் கைதிகளாக அனுப்பப்பட்டனர். சிறை வாழ்க்கை செல்லுலார் சிறையில் அன்றாட வாழ்க்கை மிகவும்  கொடூரமானதாக இருந்தது. பணிச் சூழல் குறித்து கேட்கவே வேண்டாம். 

குறைந்த அளவில் உணவும் உடையும், ஆனால் வேலையோ மிகக் கடினமானது. அத்தகையக் கடின வேலைகளுக்குப் பழக்கமில்லாதோர் தமது அன்றாட இலக்கைப் பூர்த்தி செய்யாவிட்டாலோ மேலும் கொடுந்தண்டனைகளுக்கு ஆளானர். போராளிகளை அவமானப்படுத்துவதன் மூலம் அவர் தம்  மனவுறுதியைத் தகர்ப்பதே சிறை அதிகாரிகளின் நோக்கமாக இருந்தது. 

எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்கள் பலரின் மதிப்பிடவியலாத் தியாகத்தைப் போற்றும் விதமாக செல்லுலார் சிறைக்கூடத்தை தேசிய நினைவுச் சின்னமாக கடந்த 1979- ஆம் ஆண்டு பிப்ரவரி 11 அன்று அப்போதைய பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாய் நாட்டிற்கு அர்ப்பணித்தார். அங்குள்ள அருங்காட்சியகமும் மாலையில் நடைபெறும் ஒலி-ஒளிக் காட்சியும், நமது தாய்நாடு சுதந்திரமாகத் திகழ்வதற்காக அவர்களின் தியாகத்தையும் பட்ட வேதனையையும் மனமுருக எடுத்துரைக்கின்றன.  

யுனெஸ்கோ அமைப்பின் பாரம்பரியச் சின்னங்கள் பட்டியலில் சேர்க்கப்படுவதற்காக செல்லுலார் சிறைக்கூடத்தின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் பெயரைக் கேட்டாலே குலைநடுங்கச் செய்த செல்லுலார் சிறை, இப்போது தியாகத்தின் திரு உருவாகத் திகழ்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.