பேராசிரியர் டூ தத்துவஞானி

கூட்டங்களில் பேசும் திறமை வளர்ந்த போது தான் பார்த்து வந்த பல்கலைக்கழகப் பேராசிரியர் பதவியை உதறிவிட்டு நிரந்தரப் பேச்சாளர் ஆனார்.
பேராசிரியர் டூ தத்துவஞானி
Updated on
1 min read

கூட்டங்களில் பேசும் திறமை வளர்ந்த போது தான் பார்த்து வந்த பல்கலைக்கழகப் பேராசிரியர் பதவியை உதறிவிட்டு நிரந்தரப் பேச்சாளர் ஆனார். ரஜனீஷ் அப்போது உடல் நலம் பாதிப்புக்காக அமெரிக்காவில் தங்கி சிகிச்சை பெற்றார். அங்கும் அவருடைய வித்தியாசமான பேச்சு பலரை கவர ஓரேகானில் 65 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட ஆசிரமத்தை அமைத்தார்.

அமெரிக்கர்கள் தங்களுடைய சொத்துகளை ஆசிரமத்துக்கு எழுதிக் குவித்த போது சீடர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்கள் உயர்ந்தது. புகழின் உச்சியில் அவர் இருந்ததைப் பார்க்க பொறுக்காத அரசு பல்வேறு குற்றசாட்டுகளைத் தயாரித்து கைது செய்து ரஜனீஷை நாடு கடத்தியது.

அவரின் அமெரிக்க பயணம் மிகவும் சர்ச்சைக்குரியதாக இருந்தது. அவருடைய விலையுயர்ந்த கடிகாரங்கள் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள், டிசைனர் ஆடைகள் காரணமாக அவர் எப்போதும் விவாதங்களின் மையமாகவே திகழ்ந்தார்.

1987-இல் இந்தியா திரும்பிய அவர் புணே ஆசிரமத்தை தொடங்கி 13 ஆண்டுகளில் இழந்த பெயரை மீட்டார். 59-ஆவது வயதில் உடல் நலம் குன்றி இதயத் துடிப்பு குறைந்த போதும் சிகிச்சையை மறுத்துவிட்டார். மரணத்தை நேருக்கு நேர் சந்திப்பேன் என்று பிடிவாதம் செய்து 1990-ஆம் ஆண்டு ஜனவரி 19-இல் காலமானார்.

மத்திய பிரதேசம் குக்கிராமம் குச்வாடாவில் 11-12.1931-இல் ஜைனர் தம்பதியருக்குப் பிறந்த அவரின் இயற்பெயர் சந்திர மோகன். புணே ஆசிரமத்தைப் புதுப்பித்த போது "ஓஷோ' என்ற பெயரை மாற்றிக் கொண்டார்.
புணேயில் உள்ள ஓஷோவின் நினைவிடத்தில் பொறிக்கப்பட்டுள்ள வார்த்தைகள் "ஓஷோ ஒருபோதும் பிறக்கவும் இல்லை, இறக்கவும் இல்லை, 1931 டிசம்பர் 11 முதல் 1990 ஜனவரி 19வரை பூமிக்கு வருகை தந்தார்' என்ற வார்த்தைகள்தான் அங்கு பொறிக்கப்பட்டுள்ளன.

("சிந்தனை ஓவியம்' என்னும் நூலிலிருந்து)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com