தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

ஊழல் வழக்கு பின்னணி

"திருட்டு ரயில்', "கடலில் கட்டுமரம்' ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் ரக்ஷன்.  அரசியல் பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்த இவர், அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஆர்வம் காட்ட

News image
Updated On :28 ஜனவரி 2024, 1:01 am IST

"திருட்டு ரயில்', "கடலில் கட்டுமரம்' ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் ரக்ஷன்.  அரசியல் பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்த இவர், அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்.

ரக்ஷன் அடுத்து ஆரூர் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இவர் வெற்றிமாறன், செல்வராகவன், கேஎஸ்.ரவிகுமார், எஸ்.ஜே.சூர்யா என முன்னணி இயக்குநர்களிடம் உதவி, துணை மற்றும் இணை இயக்குநராக பல வெற்றி படங்களில் பணிபுரிந்தவர். 

தமிழ்நாட்டில் நடந்த மிக பெரிய ஊழலை மையமாக கொண்டு இந்த கதையை ஆரூர் மாரிமுத்து உருவாக்கி இருக்கிறார். இந்த படத்துக்காக ரக்ஷன் தனது தோற்றத்தை முற்றிலுமாக மாற்றி வித்தியாசமாக நடிக்க உள்ளார். மிக பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்த படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார்.  அனிருத் இசையமைக்க நாயகியாக நடிக்க முன்னணி நடிகையிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.  விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.