காமராஜரின் இசை நுணுக்கம்
சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அப்போது நான் பள்ளி மாணவன். இந்திய -சீனாவுடனான யுத்தம் ஒப்பந்தம் ஏற்பட்டு நிறுத்தப்பட்டது.


சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அப்போது நான் பள்ளி மாணவன். இந்திய -சீனாவுடனான யுத்தம் ஒப்பந்தம் ஏற்பட்டு நிறுத்தப்பட்டது. இதனை வெற்றி விழாவாக கொண்டாட அப்போது முதல்வராக இருந்த காமராஜர் ஏற்பாடு செய்திருந்தார். மேடையின் முன்புறம் நாற்காலிகள் இல்லை. மணற்பரப்பில் தான் உட்கார்ந்தோம்.
அப்போது ஒருவர் பாரதியாரின் "அச்சமில்லை அச்சமில்லை' என்ற பாடலை கர்நாடக இசையில் ராகம் போட்டு தாளமில்லாமல் பாடிக் கொண்டிருந்தார். பாடலைக் கேட்டுக் கொண்டிருந்த காமராஜர் முகம் சுளித்தார். பாடிய விதம் அவருக்கு பிடிக்கவில்லை.
அதனால் பொறுமையிழந்து, கோபத்துடன் "இறங்குய்யா கீழே' என்றார்.
"விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களைத் தட்டி எழுப்பிய பாடலல்லவா இது? அதிலும் இந்த வெள்ளி விழாவில் அதனை இப்படியா பாடுவது, நம் சண்முகம் பாடப் போகிறார் பாருங்கள்' என்று சத்தம் போட்டு கூறினார் காமராஜர்.
உடனே அருகில் அமர்திருந்த தந்தையாரிடம்," நீங்கள் போய் பாடுங்கள் அப்போதுதான் இது சரியா வரும்னேன்' என்றார்.
தந்தையார் அவரிடம் மேடையில் பாடியவரைக் காட்டி "அவரைப் பாதியில் நிறுத்தி விட்டீர்களே!' என்று காமராஜரிடம் கேட்க, அவர் உடனே "அட நீங்க போங்கய்யா அப்பதான் சரியா வரும்னேன்' என்று அவர் கூறவும் தந்தையார் பலத்த கரகோஷத்திடையே மேடைக்குச் சென்றார்.
எடுப்பான குரலில் தந்தையார் "அச்சமில்லை அச்சமில்லை' பாடலைப் பாடத் தொடங்கியதும் ஒரே கரகோஷம். கூட்டத்துக்கு வந்திருந்த அனைவரும் தந்தையாருடன் சேர்ந்து பாடத் தொடங்கி விட்டனர். இதைக் கண்டு காமராஜர் பரவசமடைந்தார்.
காமராஜருக்கு, ஒரு பாடலை எப்படிப் பாட வேண்டும், என்ன ராகம் கூட்ட வேண்டும், அப்படிப் பாடினால் தான் அப்பாடலுக்கு ஓர் உயர்வினையும், உணர்வினையும் எழுச்சியையும் ஏற்படுத்த முடியும் என்ற இசை நுணுக்கமும் தெரிந்திருக்கிறதே என்று வியப்பில் ஆழ்ந்தேன்.
(கலைமாமணி டி.கே.எஸ். கலைவாணன் எழுதிய "என்னை வளர்த்த சான்றோர்" நூலிலிருந்து)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...