
அன்னை தெரசா, தனது டைரியில் சேவையின் முதல் பத்து ஆண்டு துன்பங்கள் நிறைந்ததென்றும், வருமானமில்லாத காரணத்தால் உணவுக்காகவும், ஏனைய பொருட்களுக்காகவும் பிறரை சார்ந்து இருக்க நேர்ந்ததென்றும், ஆரம்ப நாள்களில் சந்தேகமும், தனிமையும், கன்னிமடத்தின் வசதிகளுக்குத் திரும்பும் சலனமும் ஏற்பட்டதென்றும் குறிப்பிட்டுள்ளார்.
எத்தனை எத்தனை இன்னல்கள் அவருக்கு வந்த போதிலும், தான் எடுத்த காரியத்தில் பின்வாங்காமல் ஏழை மக்களின் வாழ்க்கை தரம் உயர வேண்டும்,அவர்களின் பசி போக வேண்டும் என்பதையே தன்னுடைய முழு நோக்கமாக கொண்டு செயல்பட்டார். கொல்கத்தா மாநகரில் "அன்பின் பணியாளர்' என்ற சபையினை நிறுவி பலரும் ஏழை மக்களுக்காக தொண்டு செய்ய வழி வகுத்தார். 1970- ஆம் ஆண்டில் அன்னை தெரசாவின் சேவையை இந்தியா அறிந்திருந்தாலும், உலகம் முழுவதும் தெரிவதற்கு காரணமாக இருந்தது மால்கம் முகரிட்ஜின் "சம்திங் பியூடிபுல் பார் காட்' என்ற ஆவணப்படம் தான். இந்திய குடியுரிமை பெற்ற இவருக்கு, இவரது சேவைக்காக இந்திய அரசு "பாரத ரத்னா' விருது வழங்கி கெüரவப்படுத்தியது. 1979-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு கொடுக்கப்பட்டது.அதற்கு பரிசாக கொடுக்கப்பட்ட தொகை முழுவதையும், ஏழைகளுக்கே செலவிட்டு மகிழ்ந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.