திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ரோஜா மலரே! - 74: படப்பிடிப்பு தளத்திலேயே விளையாட்டு போட்டி - குமாரி சச்சு

இயக்குநர் ஸ்ரீதர் பார்க்க வேண்டும் என்று விரும்பியவர்,  கே. பாலசந்தரைத்தான்.

News image
Updated On :31 ஜனவரி 2021, 12:30 am

சலன்

இயக்குநர் ஸ்ரீதர் பார்க்க வேண்டும் என்று விரும்பியவர், கே. பாலசந்தரைத்தான். இன்னும் சொல்லப்போனால், கே.பி. சார் இவரைப் பார்த்து தான், தானே ஓர் இயக்குநர் ஆக வேண்டும் என்ற ஆசை துளிர்விட்டது என்றும் கூடச் சொல்வார். இயக்குநர் ஸ்ரீதர், சினிமாவுக்கு வருவதற்கு முன்னர் மேடை நாடகங்கள் எழுதிக்கொண்டு இருந்தவர். பாலசந்தரும் அதே பாணியில் நாடகம் எழுதி, பின்னர் திரைப்பட இயக்குநர் ஆனவர் தான். ஒரு சமயம் இருவருடைய படப்பிடிப்பும், ஒரே ஸ்டூடியோவில் நடைபெற்ற போது, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். கே.பாலசந்தர், இயக்குநர் ஸ்ரீதர் இயக்கும் முறையைப் பார்த்து மகிழ்த்துள்ளார். அதே போல் இவரும் புகழ் பெற்று, முன்னுக்கு வந்து கொண்டிருந்த வேளையில், இயக்குநர் ஸ்ரீதர் சென்று கே.பாலசந்தர் இயக்கும் முறையைப் பார்த்து வாழ்த்திவிட்டு வந்தாராம். இப்படி இருவரும் ஒருவர் மீது ஒருவர் நிறைய மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தனர்.

முதன் முதலாக இது இயக்குநர் ஸ்ரீதர் படம், அ ஊண்ப்ம் க்ஷஹ் நழ்ண்க்ட்ஹழ் என்று போட்டது இவர்தான் என்று கூடச் சொல்வார்கள். தன்னப்பிக்கை, திறமை இரண்டும், இவரது இரு கண்கள். அதில் திறமையைப் பொருத்த வரையில், இயக்குநர் ஸ்ரீதருக்கு நிரம்ப இருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். இங்கே குறிப்பட வேண்டியது, அவரது தன்னபிக்கையைத் தான். அவர் முடிவு எடுத்தால் அது சரியாகத்தான் இருக்கும் என்று அவரிடம் நெருங்கிப் பழகியவர்களுக்குத் தெரியும். தைரியமாகப் பல்வேறு முடிவுகளை அவர் எடுப்பார். அது சரியாகவே முடிந்து இருக்கிறது.

அவரது படப்பிடிப்புத்தளத்தில் டென்ஷன் எதுவும் எட்டிக்கூடப் பார்த்தது கிடையாது. அது மட்டுமல்ல, நாங்கள் எல்லாம் படப்பிடிப்புக்கு வந்து இருக்கிறோம் என்று நினைப்பே இல்லாமல் தான் வேலை செய்வோம். அவரும், அது போலவே தான் வேலை செய்வார். ஒரு நாள் சூட்டிங் நடைபெறும் போது, ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்தப் போட்டிகள் சென்னையில் அல்ல, எங்கோ ஓர் ஊரில் கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

எல்லோரும் பார்க்க வேண்டும் என்பதற்காக, ஒரு பெரிய தொலைக்காட்சி பெட்டியை படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த இடத்துக்கு அருகில் வைத்துவிட்டார். ஒரு புறம் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்கிறது. மறுபுறம் தொலைக்காட்சியில் போட்டி நடைபெற்றது. யார் அந்தப் போட்டியை பார்க்க ஆசைபட்டாலும் அவர்கள் காணலாம்.

நாகேஷ், முத்துராமன், வி.எஸ்.ராகவன், மாலி, கோபு என்று இவர்கள் அவ்வப்போது நடித்து விட்டு,வந்து, போட்டியைப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். இவர்கள் மட்டுமல்ல, இயக்குநர் ஸ்ரீதரே ஒளிப்பதிவாளரிடம் அடுத்த ஷாட் என்ன என்று சொல்லி விட்டு, அவர் அதைத் தயார் செய்வதற்கு முன்னர் தொலைக்காட்சியில் போட்டியைப் பார்ப்பதற்கு வந்துவிடுவார். அவர்களுடன் இவரும் வந்து விட்டதால், எல்லோரும் சத்தம் போட்டுக் கத்திக்கொண்டு, ரொம்ப ரசித்துப் பார்ப்பார்கள். இயக்குநர் ஸ்ரீதர் இருக்கிறாரே என்று யாரும் பயப்படமாட்டார்கள்.

நான் முன்பே சொன்னபடி, பயம் என்ற பேச்சே ஸ்ரீதர் படப்பிடிப்பில் கிடையாது. படப்பிடிப்பின் போது தான் "இப்படிச் செய்யணும், அப்படிப் பண்ணனும்' என்று சொல்வாரே தவிர, அதற்குப் பிறகு எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து, ஒரு குடும்பம் போன்று தான் பழகுவோம். இதே போன்று தான், சித்ராலயாவில் எதற்கும் பாகுபாடு கிடையாது. குறிப்பாக, சாப்பாடு விஷயத்தில், எல்லோருக்கும் ஒரே சாப்பாடு தான். நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் என்று எல்லோருக்கும் ஒரே வகையான சாப்பாடுதான் வழங்கப்படும்.

இயக்குநர் ஸ்ரீதர் சொல்வதைச் செய்ததோடு மட்டுமல்லாமல், நானும் நாகேஷும், எங்களுக்குத் தோன்றியதைச் செய்வோம். அதுவும் காட்சிக்கு உட்பட்டுதான், நாங்கள் செய்ததை மனம் திறந்து பாராட்டுவார். நாங்கள் செய்ததை மீண்டும் மீண்டும் எங்களிடம் சொல்லி, மகிழ்ச்சி அடைவார். அதனால் எங்களுக்கு சித்ராலயா நிறுவனம் என்றால், அதுவும் ஸ்ரீதர் சார் படப்பிடிப்பு என்றால், சந்தோஷம் மட்டுமல்ல, வேறு ஒரு படப்பிடிப்பில் ஏற்பட்ட டென்ஷன் கூட, இவரது படப்பிடிப்பில் கலந்து கொண்டால், ரிலாக்ஸ் ஆகி விடும்.

"காதலிக்க நேரமில்லை' 1964 பிப்ரவரி மாதம் 27 -ஆம் தேதி வெளியானது. முதல் நாளில் இருந்தே இந்தப் படம் மக்களைக் கவர்ந்து விட்டது. எல்லோரும் இந்தப் படத்தை வெகுவாகப் பாராட்டிப் பேசினார்கள். இந்தப் படம் வெளியாவதற்கு முன்னால், தமிழக அரசு அன்று ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது. அதாவது தமிழகத்தில், தமிழ்ப் படங்களை ஒரு குறிப்பிட்ட வாரங்கள் வெளியிட வேண்டும், அப்படி வெளியிட்டால் தான் அவர்கள் திரையரங்குத் தொடர்ந்து அனுமதி தரப்படும் என்பது அந்த சட்டத்தின் முக்கியமான விதி. அந்த வேளையில் தான் "காதலிக்க நேரமில்லை' படமும் வெளியானது. அன்று இருந்த மவுண்ட் ரோடு, திரையரங்குகள் நிறைந்த இடமாக இருக்கும். இப்பொழுது இருக்கும் காசினோ திரையரங்கு, ஆண்டு முழுவதும் ஆங்கிலப் படங்களைத் தான் வெளியிடுவார்கள்.

இந்தச் சட்டத்தால் "காதலிக்க நேரமில்லை', காசினோ தியேட்டரில் வெளியாக வாய்ப்புக் கிடைத்தது. காசினோவை பற்றி இங்குக் கூற வேண்டும். எதற்காக ஆங்கிலப் படங்களை மட்டும் இந்தத் திரையரங்கில் வெளியிடுவார்கள் என்று கேட்டால், முதலில் தங்களது திரையரங்கம் உயர்வானது என்று எல்லோரும் நினைக்க வேண்டும், அது மட்டுமல்ல ; இந்தத் திரையரங்கில் ஹாலிவுட் படங்களை மட்டும் திரையிடுவோம் என்று எல்லோருக்கும் சொல்லாமல் சொல்லத்தான் என்று காரணம் சொல்வார்கள். அது மட்டுமல்ல சண்டைச் சச்சரவுகள் இல்லாமல், கூச்சல், குழப்பம் இல்லாமல் அமைதியாக, மக்கள் படங்களைப் பார்ப்பார்கள் என்று அவர்கள் நினைத்தார்கள். மேலும், ஸ்ரீ கிருஷ்ணா, உமா ஆகிய திரையரங்குகளிலும், "காதலிக்க நேரமில்லை' வெளியானது. வெளியான ஓரிரு நாட்களிலேயே இந்தப் படம் வெற்றி படம் தான் என்று எல்லோருக்கும் தெரிந்து விட்டது.

Story image

அந்தக் காலத்தில் எல்லாம் முன்னோட்டக் காட்சி போடுவார்கள். படம் வெளியாவதற்கு முன்பே காட்சி திரையிடப்படும். அந்தப் படத்தில் நடித்த நடிகர் நடிகையருடன், அந்தப் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து, படத்தைப் பார்ப்பார்கள். ஆனால் இப்போது அது போன்று முன்னோட்டக் காட்சி போடும் வழக்கம் இல்லை.

இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு, திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாகுமா என்றே தெரியவில்லை. அந்த அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்து வருகிறது. வீட்டில் உட்கார்ந்து கொண்டே, புதுப்படத்தைப் பார்த்து ரசிக்கும் அளவிற்கு நிலைமை போய்க் கொண்டு இருக்கிறது. வீட்டிலிருந்தபடியே தொலைக்காட்சியில் படம் பார்க்கலாம். ஆனாலும் தியேட்டரில் போய் பார்க்கும் அளவிற்குச் சந்தோஷம் கிடைக்குமா என்று தெரியவில்லை.

"காதலிக்க நேரமில்லை' படத்தின் வெள்ளி விழா எங்கெங்கு கொண்டாடப்பட்டது தெரியுமா?

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.