மாயா என்று பெயரிடப்பட்டுள்ள "ஸ்மோயிட்' வகையைச் சேர்ந்த நாய் மனிதர்களை போன்று பல வேலைகளை செய்யும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த விடியோவில் மாயா தான் விளையாடி முடித்த பிறகு பயன்படுத்திய விளையாட்டுப் பொருள்களை, அதற்கான கூடையில் வைக்கிறது.
உரிமையாளரைத் தினமும் காலை மிகவும் கனிவான முறையில் எழுப்பி விடுகிறது. தனது உரிமையாளருக்கு உணவைப் பரிமாற முயற்சிக்கிறது. உரிமையாளர் ஷாப்பிங் முடித்து வந்தால், பொருள்களை வீட்டுக்குள் எடுத்துச் செல்ல உதவுகிறது.
இந்த நாயின் செயல்களை விடியோவாக எடுத்த அதன் உரிமையாளர் அதனை அவரது சமூகவலைத்தள பக்கத்தில் விடியோவாக ஷேர் செய்துள்ளார். இந்த விடியோவிற்கு இன்ஸ்ட்டாகிராமில் லைக்குகள் குவிந்து வருகிறது.
இதுவரை சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த விடியோவிற்கு லைக் செய்துள்ளனர் . இந்த விடியோவிற்கு லைக் செய்துள்ள இன்ஸ்ட்டாகிராம் வாசிகள் நாயின் நற்குணங்களையும் அதன் உரிமையாளரையும் பாராட்டி வருகின்றனர் .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விக்ரம் - வேதா - விஜய்!

காவல் நிலையங்களில் சிசிடிவி: மத்திய உள்துறைச் செயலா் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

ஜொ்மனியில் ராணுவத்தைப் பலப்படுத்த இளைஞா்களுக்குப் புதிய கட்டுப்பாடு!

தமிழகத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் குற்றச்சாட்டு
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


