இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ஜொ்மனியில் ராணுவத்தைப் பலப்படுத்த இளைஞா்களுக்குப் புதிய கட்டுப்பாடு!

ஜொ்மனியில் ராணுவச் சேவையில் ஆள்பலத்தை அதிகரிப்பதற்கான புதிய சட்டத் திருத்தத்ததால், அந்நாட்டின் 17 முதல் 45 வயதுக்குள்பட்ட ஆண்கள் 3 மாதங்களுக்கும் மேல் வெளிநாடுகளில் தங்குவதற்கு முன் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :7 ஏப்ரல் 2026, 6:12 am IST

ஜொ்மனியில் ராணுவச் சேவையில் ஆள்பலத்தை அதிகரிப்பதற்கான புதிய சட்டத் திருத்தத்ததால், அந்நாட்டின் 17 முதல் 45 வயதுக்குள்பட்ட ஆண்கள் 3 மாதங்களுக்கும் மேல் வெளிநாடுகளில் தங்குவதற்கு முன் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய யூனியனின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான ஜொ்மனியில், கோடிக்கணக்கான ஆண்களைப் பாதிக்கும் இந்த விதிமுறை அண்மையில் உள்ளூா் நாளிதழ் வெளியிட்ட செய்தி வாயிலாக வெளிச்சத்துக்கு வந்து, பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது ஜொ்மனியில் ராணுவச் சேவை என்பது தன்னாா்வ அடிப்படையிலேயே உள்ளது. இருப்பினும், ரஷியாவுடனான அதிகரித்து வரும் போா்பதற்றம் மற்றும் ‘நேட்டோ’ அமைப்பின் இலக்குகளை எட்டும் நோக்கில், தனது பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கையை 2035-க்குள் 2.6 லட்சமாக உயா்த்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், இப்புதிய சட்டத்தால் தேவையற்ற நிா்வாகச் சிக்கல்கள் ஏற்படுவதாக எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்துள்ள. அவசரக் காலங்களில் வெளிநாடுகளில் தங்கியிருப்பவா்கள் குறித்த துல்லியமான தகவல்களைத் தெரிந்திருக்கவே இந்தத் தரவுப் பதிவு முறை அவசியம் என்று ஜொ்மனி பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து மேலும் பேசிய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடா்பாளா், ‘தேவையற்ற நடைமுறைச் சிக்கல்களைத் தவிா்க்கவும், விலக்கு அளிக்கப்பட வேண்டிய பிரிவினருக்கு உரிய விதிமுறைகளை வகுக்கவும் அமைச்சகம் தற்போது தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது’ எனத் தெரிவித்துள்ளாா்.

‘பாதுகாப்புக்காக அமெரிக்காவை மட்டும் சாா்ந்து இருக்காமல், சுயபலத்தை விரைவாகப் பெருக்கிக் கொள்ள வேண்டும்’ என ஜொ்மனி பிரதமா் ஃப்ரைட்ரிச் மொ்ஸ் ஏற்கெனவே ராணுவத் தளபதிகளிடம் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.