சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

சிம்மாசனங்கள்

ஜப்பான் நாட்டின் புதிய மன்னரான நருஹிட்டோ முடிசூட்டு விழாவில் பல முறை உச்சரிக்கப்பட்ட சொல் கிறிஸாந்தமம்த்ரோன் தமிழில் இதன் பொருள் செவ்வந்தி சிம்மாசனம்.

News image

வெள்ளி சிம்மாசனம்

Updated On :4 ஜூலை 2021, 12:30 am

ஜப்பான் நாட்டின் புதிய மன்னரான நருஹிட்டோ முடிசூட்டு விழாவில் பல முறை உச்சரிக்கப்பட்ட சொல் கிறிஸாந்தமம்த்ரோன் தமிழில் இதன் பொருள் செவ்வந்தி சிம்மாசனம். இது ஜப்பான் சக்கரவர்த்திகளின் சிம்மாசனம். தற்போது இது ஜப்பானின் முன்னாள் தலைநகரான சியோட்டாவிலுள்ள அரண்மனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. சக்கரவர்த்திகளின் முடி சூட்டு விழாவின் போது மட்டுமே இது பயன்படுத்தப்படுகிறது.

இது போன்ற சிம்மாசனங்கள் சிலவற்றைப் பற்றிய தொகுப்பு:

தந்த சிம்மாசனம்

திருவிதாங்கூரில் உருவாக்கப்பட்டு கடல் கடந்து இங்கிலாந்து சென்றடைந்த வரலாறு கொண்டது. தந்த சிம்மாசனம் யானைத் தந்தம் மற்றும் மதிப்பு மிக்க கற்கள் ஆகியவற்றால் இந்த சிம்மாசனத்தை உருவாக்கியவர்கள். அக்காலத்தில் பிரபல சிற்பிகளான குஞ்சு ஆசாரி மற்றும் அவரது மகன் நீலகண்ட ஆசாரியும் ஆவார்கள். மன்னர் சத்திரம் திருநாள் மார்த்தாண்ட வர்மாவின் விருப்பப்படி சிம்மாசனத்தின் கால்கள் சிங்கத்தின் கால்கள் போன்று வடிவமைக்கப்பட்டன. 1851-இல் லண்டன் அருங்காட்சியகத்துக்கு கொண்டு செல்லப்பட்ட இந்த சிம்மாசனம் பிரிட்டிஷ் மகாராணியின் விருப்பப்படி லண்டன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.

தங்க சிம்மாசனம்

Story image

தங்க சிம்மாசனம்

கன்னட மொழியில் "சின்னடசிம்மாசனம்' என்றழைக்கப்படும் தங்க சிம்மாசனம் மைசூர் உடையார் மன்னர் பரம்பரைக்குச் சொந்தமானது. பல ஆபூர்வ நவரத்தின கற்களால் உருவாக்கப்பட்ட இந்த சிம்மாசனம் பல நூற்றாண்டுகள் பழமையானது. தசரா பண்டிகையின் போது மன்னர் இந்த சிம்மாசனத்தில் இருந்தபடியே விழா நிகழ்ச்சிகளை கண்டுகளிப்பது வழக்கம். மைசூர் அரண்மனைக்குள் வெகு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இந்த சிம்மாசனம் ஆண்டுக்கு ஒரு முறை வெளியே எடுக்கப்படும்.

யாளி சிம்மாசனம்

Story image

யாளி சிம்மாசனம்

சீனர்களின் வீரத்துக்கும் துணிச்சலுக்கும் அடையாளம் யாளி (டிராகன்) எனவே தான் சீனாவை ஆண்ட சக்கரவர்த்திகளும் யாளி வடிவில் அமைக்கப்பட்ட சிம்மாசனத்தையே பயன்படுத்தினார்கள். தங்கம், வெள்ளி மற்றும் வைரங்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த சிம்மாசனம் சீன சாம்ராஜ்ஜியத்தின் கெளரவமாக கருதப்பட்டது. 

மயூராசனம்

17-ஆம் நூற்றாண்டின் மொகலாய சக்கரவர்த்தி ஷாஜஹான் உருவாக்கிய மயூராசனம் மத்திய காலத்தின் அபூர்வ பொருள்களில் ஒன்றாக விளங்கியது. உலகப் புகழ் பெற்ற கோஹினூர் வைரம், தங்கம், மதிப்பு மிகுந்த கற்கள் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட இந்த சிம்மாசனத்தின் இருபுறமும், கற்கள் பதிக்கப்பட்ட இரண்டு மயில்கள் இடம் பெற்றிருந்தன. 

1150 கிலோ தங்கம், 230 கிலோ வைரம் ஆகியவை இந்த சிம்மாசனத்தை உருவாக்கப்பயன்படுத்தப்பட்டதாக கருதப்படுகிறது. 1738-இல் இரான் ஆட்சியாளர் நாதிர்ஷா தில்லியின் மீது படையெடுத்த போது இந்த மயூராசனத்தை கொள்ளையடித்தார். நாதிர்ஷா கொல்லப்பட்டதை அடுத்து மயூராசனம் சிதைக்கப்பட்டது. 

வெள்ளி சிம்மாசனம்

சுவீடன் மன்னரின் சிம்மாசனம் சுவீடனின் ஸ்டாக் மாளிகையில் உள்ளது. 1650-இல் மகாராணி கிறிஸ்டினாவின் முடி சூட்டுவிழாவின் போது இது உருவாக்கப்பட்டது. 1975-இல் புதிய சுவீடன் ஆட்சியாளரின் பதவியேற்பு விழாவில் இது இறுதியாக பயன்படுத்தப்பட்டது.

சிங்க சிம்மாசனம்

Story image

சிங்க சிம்மாசனம்

திபெத்தியரின் ஆன்மிகத் தலைவரான தலாய் லாமாவின் சிம்மாசனம். சிங்க சிம்மாசனம் என்று அழைக்கப்படுகிறது. திபெத்தின் தலைநகர் லாஸாவிலுள்ள பொட்டாலா அரண்மனையில் இது பாதுகாக்கப்படுகிறது. இந்த அரண்மனை உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்று.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.