சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

திருமணத்தில் ஆர்வமில்லை!

எந்த வயதினராக இருந்தாலும் கனடா நாட்டவர்களில் பெரும்பாலானவர்கள் திருமணத்தில் ஆர்வம் காட்டுவதில்லை. திருமணமே தேவையற்றது என்ற மனநிலையில் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. 

News image
Updated On :27 ஜூன் 2021, 12:30 am

எந்த வயதினராக இருந்தாலும் கனடா நாட்டவர்களில் பெரும்பாலானவர்கள் திருமணத்தில் ஆர்வம் காட்டுவதில்லை. திருமணமே தேவையற்றது என்ற மனநிலையில் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. 

இது தொடர்பாக "ஆங்கஸ் ரீட்' என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் கனடாவில் திருமணம் என்பது பெரும்பாலும் வெறும் சடங்கு போல கருதப்படுவது தெரிய வந்திருக்கிறது. கலாசாரமும், சமூக அமைப்புகளும் ஒரு காலத்தில் திருமணம் என்பதை பெரிதாக எண்ணிய நிலை இருந்தது. ஆனால் கனடாவில் தற்போது நிகழ்த்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகளோ அதற்கு எதிராக இருக்கின்றன.

இளைஞர்களை விட பெரியவர்கள் திருமணத்தை மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கின்றனர். திருமணமெல்லாம் இக்காலத்துக்கு பொருந்தாது என்று இளைஞர்கள் நினைக்கிறார்கள்.

திருமணம் குறித்து கனடா நாட்டுவாசிகள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிவதற்காக பலரிடமும் கருத்துக்கேட்டு விவரம் பெறப்பட்டது. அப்போது இருவர் இணைந்து வாழ்வதற்கு திருமணம் என்னும் ஒரு விஷயம் தேவையில்லை என்று பாதிக்கும் மேற்பட்டோர் கூறினர்.

அமெரிக்கா மற்றும் பிற வளர்ந்த நாடுகளில் காணப்படுவதைப் போலவே திருமணத்தை விட வாழ்க்கையில் கல்வியும், வேலையுமே முக்கியமானவை என்ற மனநிலை கனடாவில் வளர்ந்து வருவதை ஆய்வுகள் எடுத்துக்காட்டுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.