சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

கங்கை நதிக்காக உயிர் நீத்தவர்!

உத்திபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர் ஐ.ஐ.டியில் பேராசிரியராக இருந்தவர் குருதாஸ் அகர்வால். தனது 86-ஆவது வயதில் 2018 -ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காலமானார்.

News image
Updated On :2 மே 2021, 12:30 am


உத்திபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர் ஐ.ஐ.டியில் பேராசிரியராக இருந்தவர் குருதாஸ் அகர்வால். தனது 86-ஆவது வயதில் 2018 -ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காலமானார். இது சாதாரண மரணம் அல்ல; 112 நாள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார். 

இந்து ஆசாரங்களுக்காகவும், கங்கை நதிக்காகவும் குரல் கொடுத்து வந்த இவரின் மறைவு, ஏராளமானோரை கண்கலங்க வைத்தது.

மத்திய சுற்றுச்சுழல் வாரியத்தின் முதல் உறுப்பினர் செயலராக இருந்த குருதாஸ் அகர்வால் வாழ்வின் இறுதிவரை கங்கை நதியின் புனிதத்தை காப்பாற்றி சுத்தமாக வைத்திருக்க வலியுறுத்தி 109 நாள்கள் தேன் கலந்த எலுமிச்சை சாறு மட்டுமே பருகி உயிர் வாழ்ந்தார். கடைசி மூன்று நாள்களில் எதையும் குடிக்க மறுத்து மரணத்தை தேடிக் கொண்டார் குருதாஸ் அகர்வால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.