ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

கிண்டலடித்த பாவேந்தர்

ஒரு நாள் திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை,  பாவேந்தார் பாரதிதாசனைக் காண அவரது வீட்டிற்குச் சென்றிருந்தார். இருவரும் உரையாடிக் கொண்டிருந்த போது பாவேந்தர் வீட்டுத்தூணில் கையால் தாளம் போட்டார் ராஜரத்தினம்

News image
Updated On :17 அக்டோபர் 2021, 12:30 am

அ . ப . ஜெயபால்

ஒரு நாள் திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை,  பாவேந்தார் பாரதிதாசனைக் காண அவரது வீட்டிற்குச் சென்றிருந்தார். இருவரும் உரையாடிக் கொண்டிருந்த போது பாவேந்தர் வீட்டுத்தூணில் கையால் தாளம் போட்டார் ராஜரத்தினம் பிள்ளை. 

அந்த மரத்தூணிலிருந்து தாள ஓசை வந்தது. ராஜரத்தினம் பிள்ளை திகைத்துப் போய் "என்ன ஐயா இந்த மரத்தை வீட்டில் வைத்திருக்கிறீர்கள்' என்று கேட்டார். "ஏன் என்ன ஆச்சு' என்று பாவேந்தர் கேட்டவுடன்,  "இந்த மரத்தின் பெயர் ஆச்சா மரம். இதில் தான் நாதஸ்வரம் செய்கிறார்கள். இது வீடுகளுக்கு ஆகாது. ஆச்சா ஆச்சா என எல்லாவற்றையும் அள்ளிக் கொண்டு போய்விடும் இது சாஸ்திரம்' என்றார் ராஜரத்தினம் பிள்ளை. 

"ஆமாம்! நான் அதில் சாய்ந்து கொண்டு கவிதை எழுதிக்கொண்டிருக்கும் போது இந்த மரம் என்னைப் பார்த்து என்ன கவிதை எழுதி ஆச்சா ஆச்சா என்று அடிக்கடி கேட்கும்'என்று கிண்டலாக கூறி சிரித்தார் பாவேந்தர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.