பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

எப்படி தூக்கம் வரும்?

கிருபானந்த வாரியர் திருமணம் ஒன்றிற்குத் தலைமை தாங்க சென்றிருந்தார். அங்கே நடிகவேள் எம்.ஆர். ராதாவும் வந்து இருந்தார்.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 5:32 pm

துரை. ராமகிருஷ்ணன்

கிருபானந்த வாரியர் திருமணம் ஒன்றிற்குத் தலைமை தாங்க சென்றிருந்தார். அங்கே நடிகவேள் எம்.ஆர். ராதாவும் வந்து இருந்தார். 

இருவரும் பேசிக் கொண்டிருக்க திருமண பேச்சுக்கிடையே நடிகவேள் தனது வழக்கமான கிண்டல் பாணியில் "சாமி முருகனுக்கு ஆறு தலை இருக்குன்னு சொல்றீங்க. ராத்திரி தூங்கும் போது எப்படி ஒரு பக்கமா படுப்பாரு?' என்றார். கூடி இருந்தவர்கள் அனைவரும் சிரிக்க, வாரியார் புன்சிரிப்புடன் திருமண ஏற்பாடுகளை பார்த்துக் கொண்டிருந்த மணமகளின் அப்பாவை அழைத்து அவரிடம் கேட்டார். "நேத்திக்கு தூங்கினீங்களா?' என்றார். 

"இன்னைக்கு கல்யாணத்தை வச்சுகிட்டு எங்கசாமி தூங்கறது' என்றார். வாரியார் நடிகவேளைப் பார்த்து கூறினார். "ஒரு குழந்தையின் வாழ்க்கையை நடத்தி வைக்க எண்ணிய இவர்களுக்கே தூக்கம் வரவில்லை. உலக மக்கள் அனைவருமே எம் பெருமானின் குழந்தைகள். அவருக்கு எப்படி தூக்கம் வரும்? அவருக்கு தூங்குவதற்கு நேரம் எது?' என்றார் வாரியார் சுவாமிகள். 
இதை கேட்ட நடிகவேள் தலைகுனிந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.