புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

எனக்கு வயது 30!

ஒரு முறை கலாம் பிறந்த நாள் வந்தது. அவருடன் பணிபுரிந்த நண்பர்கள் 80-ஆவது பிறந்த நாள் வாழ்த்துகள் என்றார்கள். அதற்கு கலாம் "என்ன 80 வயது முதியவர் என்கிறீர்கள். எனக்கு 30 வயது தான் ஆகிறது' என்றார்.

News image
Updated On :31 அக்டோபர் 2021, 12:30 am

அ . ப . ஜெயபால்

ஒரு முறை கலாம் பிறந்த நாள் வந்தது. அவருடன் பணிபுரிந்த நண்பர்கள் 80-ஆவது பிறந்த நாள் வாழ்த்துகள் என்றார்கள். அதற்கு கலாம் "என்ன 80 வயது முதியவர் என்கிறீர்கள். எனக்கு 30 வயது தான் ஆகிறது' என்றார்.

உடனே நண்பர்கள் சிரித்துக்கொண்டே "எப்படி 30 வயது என்று சொல்கிறீர்கள்' என்றார்கள். 

அதற்கு கலாம் சொன்னார். "1980-ஆம் ஆண்டு ரோகிணி ஏவுகணையை முதன்முதலாக வெற்றிகரமாக விண்ணில் செலுத்தினேன். அன்றைய தினம் தான் இந்த அப்துல்கலாம் என்பவர் யார் என்றே இந்த உலகிற்கு தெரியவந்தது. அன்றிலிருந்து இன்று வரை கணக்கிட்டு கொண்டால் 30 ஆண்டுகள் தான் ஆகிறது. அதனால் எனக்கு வயது 30 என்று குறிப்பிட்டேன்' என்றார்.

ஒரு மனிதர் என்று சாதிக்கிறாரோ அன்று தான் அவர் பிறந்ததாகவே கருத வேண்டும் என்கிறார். இளைஞர் ஒவ்வொருவரும் உலகில் புதிதாய் பிறந்து சாதித்து சரித்திரம் படைக்க வேண்டும் என்கிறார் கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.