சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

சர்ஜுன் இயக்கத்தில் கலையரசன்

எஸ். கே. எல். எஸ். கேலக்சி மால் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன்  மெட்ராஸ் ஸ்டோரிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் படத்தை சர்ஜுன் எழுதி இயக்குகிறார்.

News image
Updated On :31 அக்டோபர் 2021, 12:30 am

எஸ். கே. எல். எஸ். கேலக்சி மால் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன்  மெட்ராஸ் ஸ்டோரிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் படத்தை சர்ஜுன் எழுதி இயக்குகிறார். "மா', "லட்சுமி' உள்ளிட்ட பல சர்ச்சைக்குரிய குறும்படங்களையும், நயன்தாரா நடித்த "ஐரா' படத்தையும் இயக்கியவர்  சர்ஜுன்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் கலையரசன் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மிர்னா நடிக்கிறார்.  மற்ற கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. ஒரு அசாதாரணமான சூழலில் தனிமையில் இருக்கும் பெண்ணை ஒரு இளைஞன் சந்திக்க நேருகிறது. அந்த சூழலில் நடக்கும் விஷயங்களை இருவரும் எவ்வாறு சந்தித்து, பயணித்து கடந்து போகிறார்கள் என்பதை கதை. 

""ஆண்மையும்  பெண்மையும் உருவங்கள் மட்டுமே இல்லை. அதில் அவ்வளவு உணர்வுகள் உண்டு. ஒருவருக்குள் ஒருவர் தொலையாமல், ஒருவருக்குள் ஒருவர் தேடாமல், அடைய வேண்டும் என்று நினைக்கிற போதுதான் அசிங்கமாகி விடுகிறோம்.   ஒருவரின் வலியை  இன்னொருவர் புரிந்துக் கொள்ளும் போதுதான் வாழ்க்கை அழகாக மாறுகிறது. ஒரு விஷயத்தை இன்னொரு விஷயத்தில் தேடும் போதும், தொலைக்கும் போதும்தான் நாம் மனிதர்களாக ஆகிறோம்'' என்றார் இயக்குநர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.