முழு அனுபவம்
டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் அடுத்ததாக "மாயோன்' எனும் புதிய படம் தயாராகிறது ."மாயோன்' படத்தின் டீசர் வெளியாகி, பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் அடுத்ததாக "மாயோன்' எனும் புதிய படம் தயாராகிறது ."மாயோன்' படத்தின் டீசர் வெளியாகி, பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அதைத்தொடர்ந்து பாடல்கள் வெளியாகியுள்ளது. தயாரிப்பு நிறுவனத்தின் முந்தைய தயாரிப்பான "சைக்கோ' படம் "ஏ' சான்றிதழ் பெற்றிருந்தது, அதிலிருந்து மாறுபட்டு, "மாயோன்' படம் "யு' சான்றிதழ் பெற்றுள்ளது.
இப்படம் சென்சாரில் எந்த ஒரு காட்சியும் வெட்டப்படாமல் முழுப்படமும் அப்படியே தணிக்கை பெற்று, பாரட்டுக்களை குவித்துள்ளது. பார்வைத்திறன் சவால் உள்ள ரசிகர்கள் ரசிக்கும் வகையில் - அவர்களுக்கு செளகரியமான முறையில் திரைப்படத்தை அவர்கள் உணரும் அனுபவத்தை வழங்க, ஆடியோ விளக்கத்துடன் இந்திய அளவில் முதல் முறையாக படத்தின் டீஸர் வெளியானது.
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக பெரிய திரையில் முழு அனுபவத்தை பெறுவதற்காக தற்போது படக்குழு "ஆடியோ விளக்க' பாணியிலான திரைப்பட பதிப்பில் ஈடுபட்டுள்ளது. நடிகர் சிபி சத்யராஜ் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் நடிக்கின்றனர். இளையராஜா இசையமைக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...