மறக்கமுடியாத திரைப்படம்: கணவனா? மனைவியா?
பிரெஞ்சு மொழி திரைப்படத்தின் பெயர் "ரெஸ்ட்லெஸ்'. தொழில் பக்தி கொண்ட கதாநாயகனுக்கு உறுதுணையாக இருந்த மனைவி. இவர்களின் கதை 117 நிமிடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.


பிரெஞ்சு மொழி திரைப்படத்தின் பெயர் "ரெஸ்ட்லெஸ்'. தொழில் பக்தி கொண்ட கதாநாயகனுக்கு உறுதுணையாக இருந்த மனைவி. இவர்களின் கதை 117 நிமிடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அழகான திரைக்காவியத்தை இயக்கியவர் ஜோசிம் லாஃபோசீ. 2021- ஆம் ஆண்டு வெளியான படம் இது.
கடவுளே! இந்த மனுஷனுக்குக் கொஞ்சமாவது பொறுப்புணர்ச்சி இருக்கா? அவர் தன்னைப் பற்றியும் கவலைப்படவில்லை. என்னைப் பற்றியும் கவலைப்படவில்லை. குழந்தைகளைப் பற்றியும் கவலை கொள்ளவில்லை என்று லெய்லா அலுத்துக்கொண்டாள். ஜன்னல் கதவுகளை விரியத் திறந்தாள். சூரிய வெளிச்சம் பிரவாகம் எடுத்தது.
லெய்லாவின் கணவன் டேனியல் சர்வதேசப் புகழ்பெற்ற ஒரு ஓவியன். ஆர்ட் டீலர் ஒருவரிடம் நாற்பத்தியோரு கேன்வாஸ்கள் வரைந்து கொடுப்பதாக டேனியல் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தான்.
இரவு பகலாக அவன் அதற்காக உழைத்துக்கொண்டிருந்தான். இரவு உணவு கூட சாப்பிடவில்லை. ரத்த அழுத்தம்- சர்க்கரை நோய்க்கான மாத்திரைகளும் எடுத்துக்கொள்ளவில்லை. சரியாகத் தூங்கவும் இல்லையென்று லெய்லா துக்கம் கொண்டாள்.
கலைந்து கிடந்த தலைமுடியைக் கையை விட்டுக்கோதி மேலும் கலைத்துக்கொண்டான் டேனியல். வண்ணங்களைக் குழைத்து திரைச்சீலையில் பூசிக் கொண்டிருந்தான்.
"இந்த சிற்றுண்டியை உட்கொள்ளுங்கள். மாத்திரைகளையும் போட்டுக் கொள்ளுங்கள்' என்று லெய்லா வற்புறுத்தினாள்.
டேனியல் வேண்டா வெறுப்பாக உணவுத்தட்டை வாங்கிக் கொண்டான். உண்டு முடித்து மாத்திரைகளைப் போட்டுக் கொண்டான்.
குடும்ப டாக்டருக்கு லெய்லா போன் செய்தாள்.
நர்சிங் ஹோமில் அட்மிட் ஆகி ஒரு வாரமாவது சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் ஓய்வு மிக மிக அவசியம் என்று டாக்டர் கண்டிப்பான குரலில் சொன்னார்.
லெய்லா மாமனாருக்கு போன் செய்தாள்.
"நான் அவனுக்கு புத்திமதி சொல்கிறேன் அம்மா. ஆனால் சொன்னால் அவன் பேச்சைக் கேட்டால் தானே?'
"அப்பா என்னைப் பள்ளிகூடத்தில் ட்ராப் செய்கிறீர்களா?' என்று மகள் கேட்டாள்.
டேனியல் காரை எடுக்க கிளம்பிவிட்டான்.
"நீங்கள் காரை ஓட்ட வேண்டாம். போதிய ஓய்வில்லை. தூக்கம் இல்லை. நான் காரை ஓட்டிச் சென்று குழந்தையைப் பள்ளியில் விடுகிறேன்' என்று லெய்லா பரபரத்தாள்.
ஆனால் அதற்குள் டேனியல் காரைக் கிளப்பிவிட்டான்.
வீட்டில் இரண்டு கார்கள் இருந்தன. கணவனுக்குப் பாதுகாப்பாக இருப்பதற்காகத் தன் காரில் ஏறிக்கொண்டு கணவனின் காரைப் பின் தொடர்ந்தாள்.
பள்ளி வளாகம் வந்தது. குழந்தையை வகுப்பறையில் விட்டுவிட்டு வந்தான் டேனியல். லெய்லா அவனைப் பிடித்துக்கொண்டாள்.
"சரியான தூக்கம் இல்லை. ஏன் காரை எடுத்தீர்கள்?'
அசட்டுத்தனமாக சிரித்தான் டேனியல்.
வீடு திரும்பியதும். படுக்கையில் படுத்து ஓய்வு எடுத்துக்கொண்டான்.
ஸ்ட்ரெச்சருடன் இரண்டு மருத்துவமனை சிப்பந்திகள் அவன் அறைக்குள் நுழைந்தார்கள்.
"யார் உங்களை இங்கே வரச் சொன்னது? நான் நோயாளி ஆகிவிடவில்லை. நன்றாகத்தான் இருக்கிறேன்' என்று டேனியல் சீறினான்.
அறையை விட்டு எழுந்து தோட்டத்துப் பக்கம் ஓடினான்.
அவரைப் பிடியுங்கள்!
"குண்டுக் கட்டாகத் தூக்கி வந்து ஆம்புலன்சில் போடுங்கள்' என்று லெய்லா கதறினாள்.
"அம்மா நாங்கள் ஓடிப்பிடித்து விளையாட வரவில்லை. நோயாளி சம்மதித்தால் தான் அழைத்துச் செல்வோம்.'
"இப்படி முரண்டு பிடித்தால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது' என்று மறுத்துவிட்டு அவர்கள் ஆம்புலன்ûஸக் கிளப்பிக் கொண்டு போய்விட்டார்கள்.
லெய்லா அழுதாள்.
பல இடங்களில் சுற்றிவிட்டு வந்து படுக்கையில் விழுந்தான் டேனியல். அசதியுடன் தூங்கத் தொடங்கினான்.
ஆம்புலன்சுக்கு லெய்லா போன் செய்தான். வண்டி வந்தது. கம்பவுண்டர் டேனியலுக்கு மயக்க ஊசி போட்டார்.
டேனியலை ஏற்றிக்கொண்டு வண்டி பறந்தது.
மருத்துவமனை படுக்கையில் டேனியல் படுத்துக் கொண்டிருந்தான். லெய்லா அவன் தலையைக் கோதிவிட்டாள்.
"இந்த ஓய்வு எனக்கு அவசியம் தான் என்று டேனியல் அசடு வழிந்தான்.'
லெய்லா ஆர்ட் டீலரைப் பார்க்க புறப்பட்டுவிட்டாள். தன்னுடைய காரை வேகமாக ஓட்டிக்கொண்டு சென்றாள்.
ஆர்ட் டீலர் இன்முகத்துடன் வரவேற்றார்.
"மிஸ்டர் கொஞ்சம் கருணையுடன் நடந்து கொள்ளுங்கள். சீக்கிரம் பெயிண்டிங் வேலையை முடித்து தர வேண்டும் என்று என் கணவரை நச்சரிக்காதீர்கள். அந்த மனுஷன் சரியாக தூங்காமல் இரவு-பகலாக உழைத்து உடம்பை கெடுத்து கொள்கிறார்' என்றாள் லெய்லா.
ஆர்ட் டீலர் அவளை சமாதானப்படுத்த முயன்றாள்.
ஓவியக் கலையின் மீது டேனியலுக்கு இருக்கும் வெறித்தனமாக பக்தியை விட லெய்லாவுக்கு கணவன் மீது இருக்கும் பதி பக்தி படத்தை ஆக்கிரமிக்கிறது.
இல்லதரசிகள் ஒவ்வொருவரும் பார்த்து பாடம் பெற வேண்டிய உன்னத திரை ஓவியம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...