தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியான பிரபாஸின் "ராதே ஷ்யாம்'. படத்தின் டிரெய்லர் யூடியூபில் புதிய சாதனை படைத்துள்ளது. ராஜமவுலி இயக்கிய "பாகுபலி' படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்தார் பிரபாஸ். இதையடுத்து இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவர் கைவசம் "ஆதிபுருஷ்', "ராதே ஷ்யாம்', "ஸ்பிரிட்', "சலார்" போன்ற படங்கள் உள்ளன.இதில் "ராதே ஷ்யாம்' படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை ராதா கிருஷ்ணகுமார் இயக்கி உள்ளார். இப்படத்தில் பிரபாஸýக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஜஸ்டின் பிரபாகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் டிரெய்லர் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் "ராதே ஷ்யாம்' படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், "ராதே ஷ்யாம்' படத்தின் டிரெய்லர் வெளியான 24 மணிநேரத்தில் 5 மொழிகளையும் சேர்த்து 64 மில்லியன் பார்வைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் கடந்த 4 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த "பாகுபலி 2' பட சாதனையை "ராதே ஷ்யாம்' படம் தற்போது முறியடித்து உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! ஜி.கே.எம். தமிழ்க்குமரனுக்கு வாய்ப்பு!

மயிலாப்பூரில் த. வேலுவுக்கு எதிராக தமிழிசை சௌந்தர்ராஜன்!

ரூ.1,500 கோடி வசூலைக் கடந்த துரந்தர் தி ரிவெஞ்ச்!

புதுவை பிரசாரம்: சென்னை வந்தார் பிரதமர் மோடி!
வீடியோக்கள்

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி வீடியோ செய்தி...

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி வீடியோ செய்தி...

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
தினமணி வீடியோ செய்தி...
பெண்கள் பாதுகாப்பு; பழனிசாமிக்கு அருகதை இல்லை! MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

