நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காந்தியடிகளும்,  காந்தி அண்ணாமலையும்....!

காந்தியடிகள் மகாராஷ்டிர மாநிலத்துக்கு உட்பட்ட வார்தா மாவட்டத்தில் உள்ள சேவா கிராமம் ஆஸ்ரமத்தில் இருப்பதையறிந்த காந்தி அண்ணாமலை, அங்கு சென்றார்.

News image
Updated On :24 ஜூலை 2022, 12:30 am

DIN


காந்தியடிகள் மகாராஷ்டிர மாநிலத்துக்கு உட்பட்ட வார்தா மாவட்டத்தில் உள்ள சேவா கிராமம் ஆஸ்ரமத்தில் இருப்பதையறிந்த காந்தி அண்ணாமலை, அங்கு சென்றார்.

அதிகாலை நேரம். காந்தியடிகள் உலா போகத் தயாராக இருந்தார். அவரைச் சந்தித்த அண்ணாமலை, தனது சிறு குறிப்புப் புத்தகத்தை காந்தியடிகளிடம் நீட்டி கையெழுத்துக் கேட்டார்.

""ஐந்து ரூபாய் ஹரிஜன நிதிக்குக் கொடுத்தால்தான் கையெழுத்துப் போடுவேன்'' என்றார் காந்தியடிகள்.

""தருகிறேன். ஆனால் ஒரு சிறு வேண்டுகோள்'' என்றார் அண்ணாமலை.
""என்ன?'' என்றார் காந்தியடிகள்.
""தாங்கள் தென் ஆப்பிரிக்காவில் இருந்தபோது, தமிழ் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டதாகப் பத்திரிகைகளில் எழுதியிருக்கிறீர்கள். ஆகவே தயவு செய்து எனக்குத் தமிழில் கையெழுத்துப் போட்டுத் தர வேண்டும்'' என்றார்.

இதனைக் கேட்டு காந்தியடிகள் புன்னகை பூத்தார். ""தமிழ்க் கையெழுத்துக்கு ஒரு ரூபாய் கூட்டி, ஆறு ரூபாய் தர வேண்டும்'' என்றார்.

இந்த உரையாடல் நடந்து கொண்டிருந்தபோது,  அண்ணாமலை மடியில் வைத்திருந்த மணிபர்ஸ் நழுவிக் கீழே விழுந்தது.

""பார்த்தாயா?  பணம்தானே நழுவி உன்னிடமிருந்து எனக்கு வரப் போகிறது'' என்றார் காந்தியடிகள்.

""ஆறு ரூபாய் தருகிறேன்.  எனக்கு ஒரு நீதியும் சேர்த்து எழுதிக் கையெழுத்துப் போட்டு தாருங்கள்''  எனப் பேரம் பேசினார் அண்ணாமலை.  ""சரி'' என்றார் காந்தியடிகள். அண்ணாமலை ஆறு ரூபாயைக் கொடுத்தார். 

அவரது சிறிய நோட்டுப் புத்தகத்தில் ""நீரில் எழுதும் யாக்கை'' என எழுதி அடியில் "மோ.க. காந்தி' என்று தமிழில் கையெழுத்திட்டார் காந்தியடிகள்.

""இந்த வாசகத்துக்குப் பொருள் தெரியுமா?'' எனக் கேட்டார் காந்தியடிகள். அதற்குப் பொருள் தெரிந்திருந்தாலும், அவரிடம் ""தெரியும்'' என்று சொல்ல அண்ணாமலைக்குத் தைரியம் வரவில்லை. ஆகவே, ""தெரியாது'' என்று அவர் பதில் சொன்னார்.

உடனே காந்தியடிகள் நீரில்- எழுத்து- ஆகும்- யாக்கை என்று ஒவ்வொரு சொல்லாக எடுத்துச் சொல்லி அதற்குப் பொருள் சொன்னார்.

நீரில் எழுதிய  எழுத்துப் போல உடல் அழிந்து போகும் என்று அவர் விளக்கம் சொன்னபோது, அவர் அண்ணாமலைக்கு ஆசிரியரானார்.

- "நமது செட்டிநாடு' இதழிலிருந்து முல்லை மு.பழநியப்பன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.