நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இளையராஜா ஸ்டூடியோவில் ரஜினி

நடிகர் ரஜினியும், இசையமைப்பாளர் இளையராஜாவும் மிகுந்த நட்போடு பழகுகிறவர்கள்.

News image
Updated On :5 ஜூன் 2022, 4:24 pm

DIN

நடிகர் ரஜினியும், இசையமைப்பாளர் இளையராஜாவும் மிகுந்த நட்போடு பழகுகிறவர்கள். இளையராஜாவை ரஜினி எப்போதும் "சாமி' என்றே அழைப்பார். இருவரும் தனிப்பட்ட குடும்ப விஷயங்களை கூட பகிர்ந்து கொள்வார்கள். 

இளையராஜா தற்போது கோடம்பாக்கத்தில் சொந்தமாக ஸ்டூடியோ அமைத்துள்ளார். மன அமைதி தேவைப்படும்போதெல்லாம் இந்த ஸ்டூடியோவுக்கு செல்வதை ரஜினி வழக்கமாக வைத்துள்ளார். அங்கு நெடுநேரம் அமர்ந்து இளையராஜாவின் பாடல்களைக் கேட்பார். அவர் பணியாற்றுவதைப் பார்த்து ரசிப்பார். விரைவில் இளையராஜா கோவையில் பிரமாண்ட கச்சேரி ஒன்றை நடத்துகிறார். இதற்கான ரிகல்சல் நடப்பதை கேள்விட்டு இளையராஜாவின் ஸ்டூடியோவுக்குச் சென்று அதைப் பார்த்து ரசித்துள்ளார் ரஜினி.சென்னை போயஸ்கார்டன் வீட்டில் ரஜினிகாந்தை, இளையராஜா சென்று சந்தித்தார். 

இருவரும் நீண்ட நேரம் மனம் விட்டு பேசினர். 

அப்போது இளையராஜா விடைபெறும் போது, "சாமி ஏதாவது வேலை இருக்குதா' என்று ரஜினிகாந்த் விசாரிக்க, ""என் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 2-ஆம் தேதி கோவையில் நடக்கும் இசை நிகழ்ச்சிக்காக ரிகர்சல் நடந்துகொண்டிருக்கிறது. ஸ்டூடியோ செல்கிறேன்' என இளையராஜா கூறியுள்ளார். 

""அப்படியா.. நானும் வருகிறேன்'' என்று ஆர்வமான ரஜினிகாந்த், தனது காரிலேயே இளையராஜாவை அழைத்து சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.