தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆரோக்கியமான சமூகத்துக்கு.....

பாரம்பரிய முறையில் உணவுப் பொருள்களை தயாரித்து விநியோகம் செய்து, பொதுமக்களின் ஆரோக்கியத்துக்கு தனது விதை நிறுவனம் மூலம் உரமிட்டு வருகிறார் ஹரிணி.

News image
Updated On :13 மார்ச் 2022, 12:30 am

சுஜித்குமார்

பாரம்பரிய முறையில் உணவுப் பொருள்களை தயாரித்து விநியோகம் செய்து, பொதுமக்களின் ஆரோக்கியத்துக்கு தனது விதை நிறுவனம் மூலம் உரமிட்டு வருகிறார் தொழில்முனைவராக உள்ள ஹரிணி துரைராஜ்.

தற்போது ஜங்க் புட் உணவுப் பழக்கம், பானி பூரி உள்பட பல்வேறு உணவுப் பொருள்களால் சிறிய வயதிலேயே புற்றுநோய், நீரிழிவு நோய், ரத்தக்கொதிப்பு உள்பட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. இவற்றை தவிர்க்கும் விதமாக பாரம்பரிய உணவு வகைகளான கேழ்வரகு, கம்பு, தினை, சத்து மாவு, பயறு வகைகள், கலப்படமில்லாத ஆர்கானிக் உணவுப் பொருள்களை உண்ணும் பழக்கம் மக்கள் மத்தியில் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் இளம் பெண்ணான ஹரிணி துரைராஜ் பாரம்பரிய முறையிலும், ஆர்கானிக் முறையில் கலப்படமில்லாத உணவுப் பொருள்களை தயாரித்து ஆரோக்கியமான சமூகத்துக்கு தனது விதை நிறுவனம் மூலம் உரமிட்டு வருகிறார்.

எம்.எஸ்.சி பயோ இன்ஃப்ர்மேட்டிக்ஸ் முதுநிலை பட்டதாரியான ஹரிணிக்கு சிறுவயது முதலே பெண் தொழில்முனைவோராக வேண்டும் என்பது விருப்பம் ஆகும்.

நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த  துரைராஜ்-சகுந்தலா தம்பதியின் மகளான ஹரிணி பள்ளிப் படிப்பை கூடலூரிலும், கல்லூரிப் படிப்பை கோவையிலும் முடித்தார்.  பின்னர் தனது கல்லூரியிலேயே விரிவுரையாளராகவும், பின்னர் சில பள்ளிகளில் ஆசிரியையாகவும் பணிபுரிந்தார். எனினும் தொழில்முனைவோர் ஆக வேண்டும் என்ற விருப்பம் மட்டும் தொடர்ந்து கொண்டே இருந்தது.

மத்திய உணவுப் பாதுகாப்புத் துறையிடம் தனது உணவுப் பொருள் தயாரிப்புக்கான உரிமத்தை பெற்ற பின் அதற்கு விதை எனப் பெயரிட்டார். தனது வீட்டிலேயே 3 உதவியாளர்களைக் கொண்டு கலப்படமில்லாத சத்து மாவு, பல்வேறு வகையான பொடிகள் என 80 வகையான பொருள்களை தயாரித்து நுகர்வோருக்கு அனுப்பி வருகிறார். 

ஹரிணி துரைராஜ் கூறியதாவது:

""சாம்பார், ரசப் பொடிகள், பருப்பு பொடிகள், குழம்பு மிளகாய் பொடி, பிரியாணி மசாலா, எள்ளு பொடி, பனை சர்க்கரை, சுக்குமல்லி காஃபி, மசாலா டீ, குழந்தைகள் விரும்பி உண்ணும் சத்துமாவு போன்றவற்றை தரம் குறையாமலும், ஆர்கானிக் முறையிலும் தயாரித்து வருகிறோம். எங்கள் விதை நிறுவனம் மூலம் நுகர்வோருக்கு ஆரோக்கியமான நோய் இல்லாத சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதில் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறேன்.

இத்தொழிலில் லாபத்தை முன்வைக்கவில்லை. ஆர்கானிக் பொருள்களை நேரடியாக விவசாயிகளிடமே வாங்கி உணவுப் பொருள்களை தயாரித்து வருகிறோம்.  நுகர்வோரின் கருத்துகளை பெற்று அதைக் கொண்டு குறைகளை திருத்திக் கொள்கிறோம். 

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் என அனைத்து வகையான சமூகவலை தளங்களும் இதற்கு பேருதவியாக உள்ளன.  உற்பத்திப் பிரிவை அமைக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோளாகும்''   என்றார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.