குடியேற்றத்தால் உருவான தோட்டங்கள்
1876-ஆம் ஆண்டில் தமிழகத்தில் மிகப்பெரிய பஞ்சம் தலைவிரித்தாடியது. அந்தப் பஞ்சத்தில் ஆயிரமாயிரம் தமிழர்கள் இறந்திருக்கிறார்கள்.


1876-ஆம் ஆண்டில் தமிழகத்தில் மிகப்பெரிய பஞ்சம் தலைவிரித்தாடியது. அந்தப் பஞ்சத்தில் ஆயிரமாயிரம் தமிழர்கள் இறந்திருக்கிறார்கள். அவை குறித்து சிற்றிலக்கியமான கும்மி வடிவில் மலைமருத்தன் "தாது வருட கருப்புக்கும்மி', அரசர்குளம் சாமிநாதன் "தாது வருடப் பஞ்சம் நீக்கிய கும்மி' , வில்லியப்பிள்ளை "பஞ்சலட்சணத் திருமுக விலாசம்' என்ற பெயர்களில் எழுதிய நூல்கள் தெளிவுபடுத்துகின்றன. தமிழகத்துப் பஞ்சம் குறித்து அப்போது வாழ்ந்த ஆங்கிலயே அதிகாரியான பெர்ஸி மேக்வின் என்பவர் தொகுத்த நாட்டுப்பாடல் ஒன்றில் பசியால் மடிந்து கேட்பாரற்று கிடந்த சடலங்களை பற்றி கவிதை எழுதியுள்ளார்.
இப்படிப் பஞ்சத்திலே மக்கள் மடிந்து சாவதை பார்த்த ஏனைய தமிழ் மக்கள் தப்பிக்க என்ன வழி என்று தவித்துக் கொண்டிருந்த போது தான் காலனித்துவ நாடுகள் ஆண்ட ஆங்கிலேயரும், பிரெஞ்சுக்காரர்களும் தாங்கள் கைப்பற்றிய நாடுகளுக்கு அவர்களைக் கூலிகளாக கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டார்கள். பஞ்சத்தில் இருந்து தப்பினால் போதுமென்ற நோக்கத்தில் தாம் வாழும் ஊர்களை விட்டுப் போக முடிவு செய்தார்கள், தமிழ்மக்கள். இந்த தமிழர்களால் பர்மாவில் விவசாய நிலங்கள், இலங்கையில் தேயிலைத் தோட்டங்கள், மலாயாவில் ரப்பர் தோட்டங்கள், மொரீசியசில் கரும்புத் தோட்டங்கள், பிஜித்தீவில் கரும்புத் தோட்டங்கள் எல்லாம் உருவாகின.
(மாத்தளை சோமு எழுதிய "பர்மாவும் தமிழர்களும்' நூலிலிருந்து)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...