நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கீர்த்தியின் நன்றி!

அருண் மாதேஸ்வரனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட "சாணி காயிதம்'  படம் சமீபத்தில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. 

News image
Updated On :28 மே 2022, 6:30 pm

தினமணி

அருண் மாதேஸ்வரனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட "சாணி காயிதம்'  படம் சமீபத்தில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. 

பழிவாங்கும் அதிரடி ஆக்ஷன் படமான அது ஒவ்வொரு சினிமா ரசிகரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறிப்பாக,  செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் நடிப்பு குறித்து பரவலாகப் பேசப்பட்டது. படத்தின் வெற்றி குறித்து கீர்த்தி சுரேஷ் கூறும்போது:

"உலகம் முழுவதும் உள்ள எனது ரசிகர்கள்,  சகாக்களால் "சாணி காயிதம்' விரும்பப்பட்டு ரசிக்கப்படுவதற்கு நன்றியுடன் தலைவணங்குகிறேன்.  ஒரு நடிகருக்குப் பார்வையாளர்களின் பாராட்டுகளை விட மகிழ்ச்சி தருவது வேறு எதுவும் இல்லை. 

இந்த பொன்னி பாத்திரத்துக்கு நான் பொருந்தி வருவேனா என்கிற சந்தேகம் எனக்கு இருந்தது. ஆனால் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் என் மீது வைத்திருந்த நம்பிக்கையுடன் அந்தப் பாத்திரமாகவே என்னால் மாற முடிந்ததில் மகிழ்ச்சி.

என் இதயத்தை விட்டு எப்போதும் நீங்காத  இப்படத்தின்  ஒரு பகுதியாக இருந்ததற்காக ஒட்டுமொத்த குழுவிற்கும் எனது சக நடிகர் செல்வா சாருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்''  என்றார். 

"சாணி காயிதம் மூலம் நடிகராக எனது பயணத்தை தொடங்கியதில் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன். 

நான் நடித்த பாத்திரம் ஒரு ஆற்றல் வாய்ந்தது மற்றும் என்றென்றும் என்னுடன் இருக்கும்" என்று நெகிழ்ந்துள்ளார் செல்வராகவன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.