ஜெயம் ரவி, யோகி பாபு, காஜல் அகர்வால் ஆகியோரது நடிப்பில் வெளிவந்த படம் "கோமாளி'. கரோனா கால முடக்கத்துக்குப்பின் வெளியான இப்படம், பெரும் அளவில் வெற்றிப் பெற்றது. இந்தப் படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன், தற்போது கதாநாயகனாக நடிக்கிறார். "லவ் டுடே' என்ற பெயரில் படத்தை இயக்கி அதில் கதாநாயகனாகவும் நடிக்கிறார். இதில் அவருடன் இவானா, சத்யராஜ், ராதிகா, யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
முதல் படம் ஹிட் கொடுத்த நிலையில், அடுத்த படத்தில் ஹீரோவாக நடிப்பது குறித்து பிரதீப் ரங்கநாதன் பேசும் போது.... ""முதல் படமான "கோமாளி'யில் நான் நடித்திருக்க வேண்டும். அப்போது நான் சினிமாவுக்கே புதுமுகம் என்பதால் தயாரிப்பாளர்கள் கிடைத்திருக்க மாட்டார்கள். அதனால் ஒரு பெரிய ஹீரோவை வைத்து படம் இயக்கி வெற்றிப் பெற வேண்டும் என்ற முனைப்பில் இருந்தேன். அதில் வெற்றியும் கிடைத்தது.
இப்போது நடிக்கும் விருப்பத்தை நிறைவேற்றியுள்ளேன். இந்தக் கதையை நான் நடிப்பதற்காகவே எழுதினேன். 6 வருடங்களுக்கு முன்பே இதை குறும்படமாக எடுத்தேன். அதிலும் நானே நடித்தேன். ஒரு காதல் ஜோடி தங்களது செல்போனை ஒரு காலகட்டத்துக்குப் பின்னர் மாற்றி கொண்டால் என்ன நடக்கும் என்பதை காமெடியாக சொல்லுவதே கதை. இனி இயக்கம், நடிப்பு என என் பயணம் இருக்கும். பிற இயக்குநர்கள் அழைத்தால் அதிலும் நடிப்பேன்'' என்றார் பிரதீப்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏலகிரியில் கூடுதலாக அரசு தங்கும் விடுதி: சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை!

காஞ்சனகிரி மலை சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்படுமா? பொதுமக்கள் எதிா்பாா்ப்பு!!
டாஸ்மாக் மதுபாட்டில்கள் கடத்தியவா் கைது

நாம் தமிழா் கட்சிக் கொடி அவமதிப்பு: கடலூா் எஸ்.பி.யிடம் புகாா்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


