ஆர். எஸ். கார்த்திக் கதையின் நாயகனாக நடித்து வரும் படம் "போர்குடி' . இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் "வீச்சருவா வீசி வந்தோம்..' எனத் தொடங்கும் பாடலுக்கான விடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுக்கு அர்ப்பணிக்கும் வகையில் இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் ஆர். எஸ். கார்த்திக் ஜோடியாக ஆராத்யா நடிக்கிறார். இவர்களுடன் சங்கர் தாஸ், அருண்மொழி தேவன், மனோஜ் கண்ணன், செந்தில்குமரன், விஜயகுமார், ஜானகி அம்மாள் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ரமேஷ் ஏழுமலை ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு செந்தமிழ் இசையமைத்திருக்கிறார். படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேதாஜியின் புகழைப் போற்றும் விதமாக உருவாகியுள்ள இந்தப் பாடலை ஆர். தியாகு எழுதியிருக்கிறார். இந்த பாடலை, வி. எம். மகாலிங்கம் மற்றும் லட்சுமி ஜே.கே. ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.
பாடலைப் பற்றி ஆர்.எஸ். கார்த்திக் பேசுகையில்.... ""ஒரு படத்தின் முகவரியாக அந்தப் படத்தில் இடம்பெறும் பாடல்கள் அமைந்திருக்கும். முன்னணி நட்சத்திர நடிகர்களின் படங்களிலிருந்து பாடல்கள் வெளியாகும் போது, அவை லிரிக்கல் விடியோவாக இணையத்தில் வெளியாகும். ஆனால் எங்கள் படக் குழு முதன் முறையாக "வீச்சருவா வீசி வந்தோம்..' எனத் தொடங்கும் பாடலின் விடியோவை வெளியிடுகிறோம். இந்தப் பாடலை நேதாஜி சுபாஷ் சந்திரபோûஸப் போற்றும் வகையில் உருவாக்கி இருக்கின்றன. இதுவரை சுதந்திரப் போராட்ட தியாகிகளையும், தலைவர்களையும் போற்றி ஏராளமான பாடல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் நேதாஜி சுபாஷ் சந்திர போஸைப் போற்றும் வகையில் தமிழில் பாடல்கள் வெளியானதில்லை. அதை உருவாக்கியிருக்கிறோம் என்பதில் பெருமை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

27.4.1976: தமிழ் நாட்டில் 98.3% கிராமங்கள் மின் வசதி பெற்றன
ஈரானுடன் அமைதி பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டா்கள்! - அதிபர் டிரம்ப் அறிவிப்பு

சேலத்தில் ‘ரிக்’ தொழிலாளி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

தில்லியில் வெப்ப அலைக்கான செயல்திட்டம்: முதல்வா் ரேகா குப்தா வெளியிட்டார்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


