ஹிப் ஹாப் ஆதி - ஐசரி கணேஷ் கூட்டணி
'வெந்து தணிந்தது காடு' படத்தின் பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரித்து வரும் படத்தில் இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப்...


"வெந்து தணிந்தது காடு' படத்தின் பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரித்து வரும் படத்தில் இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் தமிழா கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்துக்கு இன்னும் பெயரிடப்படாத நிலையில், படத்தின் படப்பிடிப்பு வேகம் எடுத்துள்ளது. "நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' எனும் படத்தை இயக்கிய கார்த்திக் வேணுகோபாலன் எழுதி இயக்குகிறார். இசையமைப்பாளராக இருந்து கதாநாயகனாக உயர்ந்திருக்கும் ஹிப் ஹாப் தமிழா நடிப்பில் தயாராகும் ஏழாவது படம் இது.
"எல் கே. ஜி', "கோமாளி', "மூக்குத்தி அம்மன்', "வெந்து தணிந்தது காடு' என வரிசையாக பல படங்களைத் தயாரித்து, தமிழ் திரையுலகில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தரமான படைப்புகளைத் தொடர்ந்து வழங்கி வரும் ஐசரி கே. கணேஷ் பிரம்மாண்டமான பொருட்செலவில் இப்படத்தைத் தயாரிக்கிறார். டாக்டர் ஐசரி கே கணேஷ் - ஹிப் ஹாப் தமிழா - கார்த்திக் வேணுகோபாலன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில், கோகுல் இயக்கத்தில், நடிகர் ஆர். ஜே. பாலாஜி கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'சிங்கப்பூர் சலூன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...