தேவி ஸ்ரீ பிரசாத்தின் சுயாதீன ஆல்பம்
தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து, பாடல் வரிகள் எழுதி, பாடி, நடனம் அமைத்து, நடித்து, இயக்கி இருக்கும் "ஓ பெண்ணே" பாடலை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.


தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து, பாடல் வரிகள் எழுதி, பாடி, நடனம் அமைத்து, நடித்து, இயக்கி இருக்கும் "ஓ பெண்ணே" பாடலை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். இந்த பாடல் ஒரு பான்-இந்திய பாப் பாடலாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாடலின் தமிழ் பதிப்பை கமல்ஹாசன் வெளியிட்டார். இந்த பாடலின் ஹிந்தி பதிப்பை ரன்வீர் சிங் முன்னரே வெளியிட்டு இருந்தார். இந்த பாடலின் தெலுங்கு பதிப்பு நாகார்ஜூனாவால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் நடிகர் கமல்ஹாசன் பேசும் போது... ""தேவி ஸ்ரீபிரசாத் என்னை அதிகமாக வியக்க வைத்துக் கொண்டே இருக்கிறார்.
பல சாதனைகள் படைத்து அடுத்து அடுத்து என உத்வேகமாக நகர்ந்து கொண்டே இருக்கிறார், அது சிறந்த இசை கலைஞர்களுக்கே உண்டான சிறப்பம்சம். இவருக்கு வெற்றி கண்டிப்பாக வந்தே தீர வேண்டும், இவருக்கு வெற்றி தாமதாகிறது எண்ணி நான் வருத்ஹதப்பட்டு இருக்கிறேன். இவருக்கு உங்களது ஆதரவு கண்டிப்பாக தேவை. திரை இசை பாடல்களை தாண்டி, சுயாதீன பாடல்கள் நிறைய வர வேண்டும், இசை கலைஞர்கள் அதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. சுயாதீன பாடல்கள் தான் இசை கலைஞர்கள் தங்களுடைய முழு திறமையும் வெளிகாட்ட ஒரு பாதையாக இருக்கும். மற்ற நாடுகளில் திரை பிரபலங்களை விட சுயாதீன கலைஞர்கள் பிரபலமாகி இருக்கிறார்கள். பழைய காலத்தில் இது அதிகமாக இருந்தது, இப்போதும் மீண்டும் அது வர வேண்டும்'' என்று பேசினார் கமல்ஹாசன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...