"ஒவ்வொருவரையும் கேட்டுக் கொண்டே நாம் பயணம் போவதென்றால் ஊர் போய் சேர முடியாது'' என்று கவியரசு கண்ணதாசனிடம் மறைந்த முதல்வர் எம்ஜிஆர் கூறி நெகிழ்ந்த சம்பவம் உண்டு. 1978-ஆம் ஆண்டில் கண்ணதாசனை ‘அரசவைக் கவிஞர்' என்ற பதவியில் அமர்த்துவதாக மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அறிவித்தார். இது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.
ஏனெனில், அதிமுக ஆளும்கட்சியாக மாறிய பின்னரும், கண்ணதாசன் விமர்சித்தே வந்தார். மனதில் பட்டதைப் பேசுவதும், எழுதுவதுமே கவியரசுவின் வாடிக்கை. அவரது மனம் வெள்ளை மனம். எதையும் மூடி மறைத்து தன்னை களங்கப்படுத்திக் கொள்ள கண்ணதாசன் விரும்பவில்லை.
இந்த நிலையில், தன்னை விமர்சனம் செய்தவருக்கே பதவியை எம்ஜிஆர் அறிவித்தது அரசுத் துறை வட்டாரங்களில் மட்டுமன்றி, அரசியலும் ஓர் இன்ப அதிர்ச்சிதான். இந்த அறிவிப்பை அரசாணையாக வெளியிடுவதற்கு முன்னர், கண்ணதாசனிடம் எம்ஜிஆர் கூறும்போது, "உங்களுடைய தகுதிக்கு இது ஒன்றும் பெரிய பதவியல்ல. ஆனால் என்னுடைய அதிகார வரம்பில் நான் செய்யக் கூடிய மரியாதை இதுதான். நான் இதை அறிவிக்கப் போகிறேன். நீங்கள் இதை மறுத்துவிடக் கூடாது'' என்றார்.
இதற்கு கண்ணதாசனும், "நான் உங்களைப் புகழ்ந்ததாகவும், நீங்கள் அதற்கு விலை கொடுத்ததாகவும் ஊரார் பேசுவார்களே!'' என்றார்.
இதைக் கேட்டு சிரித்த எம்ஜிஆர், " ஒவ்வொருவரையும் கேட்டுக் கொண்டே நாம் பயணம் போவதென்றால் ஊர் போய் சேர முடியாது'' என்றார்.
பின்னர், கண்ணதாசன் மறுப்பு கூறாமல் அந்தப் பதவியை ஏற்றுக் கொண்டார். இந்த விஷயத்தை "கண்ணதாசன் பார்வையில் எம்ஜிஆர்' என்ற நூலில் கண்ணதாசனே எழுதியிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சென்னையில் விஜய் சாலைவலம்!

அதிமுக ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்தில் கஞ்சாவை ஒழிப்போம்: இபிஎஸ்
ஜெர்மனி குருத்வாராவில் சீக்கியர்கள் மோதல்; 11 பேர் காயம்!

பாஜக ஆட்சி அமைத்த 6 மாதங்களுக்குள் கோர்க்கா பிரச்னைக்குத் தீர்வு: அமித் ஷா
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


