விஷ உணவு சாப்பிட்ட லதா மங்கேஷ்கர்!

விஷ உணவு சாப்பிட்ட லதா மங்கேஷ்கர்!

பிரபல பின்னணிப் பாடகியான மறைந்த லதா மங்கேஷ்கரின் வாழ்க்கையில் 1968-ஆம் ஆண்டில் மிகப் பெரிய அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றது.
Published on

பிரபல பின்னணிப் பாடகியான மறைந்த லதா மங்கேஷ்கரின் வாழ்க்கையில் 1968-ஆம் ஆண்டில் மிகப் பெரிய அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றது.

ஒருநாள் அவருக்கு தொடர்ந்து மூன்று முறை வாந்தி வந்தது. மருத்துவரிடம் ஆலோசித்தபோது, தீவிர பரிசோதனைக்குப் பின்னர் அவர் சொன்ன விஷயத்தைக் கேட்ட லதாவே அதிர்ந்தார்.

""உங்கள் உணவில் மனிதர்களைச் சிறிது சிறிதாகக் கொல்லக்கூடிய விஷத்தை யாரோ கலந்து கொடுத்திருக்கிறார்கள்'' என்பதுதான் அந்த அதிர்ச்சி செய்தி.

யாராக இருக்கும் என்று ஆராய்ந்தபோது, அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி ஒருவர் சமீபத்தில் வேலையில் இருந்து நின்று விட்டது தெரியவந்தது.

இதற்குப் பிறகு மூன்று மாதங்கள்  உடல்நலம் பெரிதும் பாதிக்கப்பட்டு பாடல் பதிவுக்குக் கூட செல்லாமல் லதா இருந்தார். பிறகு , பூரண குணம் அடைந்தார்.

இந்தத் திடுக்கிடும் செய்தியை லதா மங்கேஷ்கரே தனது சுய சரிதையில் குறிப்பிட்டிருக்கிறார். வாழ்க்கையில் சோதனைகளை சாதனைகளாக்கிய பெண்தானே அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com