தனித்துவமாக ஈர்க்கும்

அழுத்தமான தடம் பதித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் செல்வகுமார். இயக்குநர்கள் முத்தையா, மீரா கதிரவன் ஆகியோரிடம் சினிமா கற்றவர்.
தனித்துவமாக ஈர்க்கும்
Updated on
1 min read

அழுத்தமான தடம் பதித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் செல்வகுமார். இயக்குநர்கள் முத்தையா, மீரா கதிரவன் ஆகியோரிடம் சினிமா கற்றவர். இப்போது இவர் இயக்கி வெளிவந்துள்ள பம்பர் படம் தனது தனித்துவ கதையால் பெரும்பான்மை ரசிகர்களை ஈர்த்து வருகிறது. படம் குறித்து இயக்குநர் பேசும் போது.... உலகம் எங்கும் நிறைந்து கிடப்பதும், உலகமே தேடிக் கொண்டிருப்பதும் அன்புதானே. பொருளையும், பணத்தையும் முதன்மைப்படுத்தாமல் வாழ்க்கைக்கு அன்புதான் முக்கியம் என்பதை அடுத்த தலைமுறைக்கு சொல்லிக் கொடுத்தாலே போதும், ஆரோக்கியமான தலைமுறை உருவாகி விடும். இதற்கு தேவையில்லாத தியாகங்கள் அவசியமில்லை. ஒருவன் பணத்துக்காக எதையும் செய்வான். அந்தக் கதாபாத்திரத்தில் வெற்றி. ஒருவன் வாழ்வை அறத்தோடு வாழ்ந்து வருகிறான். அந்த இடத்தில் ஹரிஸ் பேராடி. இருவரும் சந்திக்கும் புள்ளியில் மனிதம் என்ன ஆனது என்பதே திரைக்கதை. கேரளத்தில் லாட்டரி சீட்டு விற்பவர்களில் கணிசமாக தமிழர்கள் இருக்கிறார்கள். அதன் பின்புலத்தை ஆராய்ந்து கதைக் களமாக பயன்படுத்திக் கொண்டேன். கேரள மாநிலத்தை தவிர பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் பரிசுத் தொகை பெறுவதற்கு குறிப்பிட்ட நடைமுறைகள் உள்ளன. அப்படி குலுக்கலில் விழுந்த பரிசுத் தொகையை வாங்க யாராவது வருவார்களா... இல்லை அது அந்த மாநில அரசு கஜானாவுக்கே செல்லுமா.... என்பதை விறுவிறுப்பான திரைக்கதையின் அங்கமாக வைத்தேன்.  இலக்குகள், லட்சியவாதங்கள், அரசியல் எதுவும் இல்லாத எளியவர்களின் வாழ்க்கை எவ்வளவு நிம்மதியானது. வாழ்க்கையை அதன் உண்மையோடும், அன்போடும் கொண்டாடுபவர்கள்தான் கொடுத்து வைத்தவர்கள். அதே போன்ற நம்பிக்கைகள்தான் இந்தப் படம். நாம் அனுதினமும் கவனிக்காமல் கடந்துப் போகிற ஒவ்வொர் எளிய மனிதனும், அவன் உலகத்தில் ஹீரோதான். இதுதான் இந்தப் படம். வரவேற்புக்கு நன்றி.'' என்றார் செல்வகுமார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com