தந்தை வழியில் ஸ்டண்ட் இயக்குநராக அறிமுகமாகும் ஸ்டன் சிவாவின் மகன் கெவின் குமார். தமிழ் சினிமாவின் முன்னணி ஸ்டண்ட் இயக்குநர்களில் ஒருவர் ஸ்டன் சிவா. கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் ஸ்டண்ட் துறையில் மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்து வரும் ஸ்டன் சிவா, தென்னிந்திய திரையுலகில் உள்ள பல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கும் சண்டைக் காட்சிகளை வடிவமைத்து வருகிறார். அதுமட்டுமல்ல ஒவ்வொரு சண்டைக்காட்சியையும் வித்தியாசமான முறையில் ரசிகர்கள் விரும்பி ரசிக்கும் வகையிலும், படத்தின் கதை ஓட்டத்திற்கு ஏற்றார்போலவும் வடிவமைப்பதில் வல்லவர்.
சமீபத்தில் வெளியான 'ருத்ரன்- , 'விடுதலை- , 'கஸ்டடி- ஆகியவை இவர் ஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றிய படங்கள்தான். ரஜினிகாந்த் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள 'ஜெயிலர்- படத்திலும் சண்டைக் காட்சிகளை ஸ்டன் சிவா தான் வடிவமைத்துள்ளார். இந்த நிலையில் தற்போது ஸ்டன் சிவாவின் மகன் கெவின் குமார் விரைவில் ஸ்டண்ட் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். கடந்த பல வருடங்களாகவே தனது தந்தையுடன் இணைந்து தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஆக்ஷன் காட்சிகளில் பணியாற்றியதுடன் அதன் நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டுள்ளார் கெவின் குமார். கடந்த வருடம் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்த 'அகாண்டா- மற்றும் தற்போது தயாராகி வரும் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்- ஆகிய படங்களில் ஒரு சில சண்டைக் காட்சிகளை தானே வடிவமைத்துள்ளார் கெவின் குமார்.
சண்டைக் காட்சிகளை இவர் வடிவமைத்த நேர்த்தியை பார்த்து வியந்துபோன ரஜினிகாந்த் இவரை பாராட்டி உள்ளதுடன் எதிர்காலத்தில் தமிழ் சினிமாவில் சிறந்த ஸ்டண்ட் இயக்குநராக வரவேண்டும் என தனது ஆசிகளையும் வழங்கியுள்ளார். ஸ்டன் சிவா இதுவரை பணியாற்றி வந்த முன்னணி நிறுவனங்கள் சிலவற்றில் கெவின் குமாரை ஸ்டண்ட் இயக்குநராக அறிமுகப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்களிப்பதற்காக சிவகங்கை சென்றவா் பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் மயங்கி விழுந்து பலி

எஸ்.எஸ்.பாலாஜி, ஆளுர் ஷாநவாஸ் ஆகியோருக்கு விசிக-வில் முக்கியப் பொறுப்பு!

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


