காற்று நகரம் பாகூ

அசர்பைஜான் நாட்டின் தலைநகரம் பாகூ.  சோவியத் யூனியன் 1991-இல் உடைந்தபோது, அசர்பைஜான் தனிநாடாகியது.
காற்று நகரம் பாகூ
Published on
Updated on
1 min read


அசர்பைஜான் நாட்டின் தலைநகரம் பாகூ. சோவியத் யூனியன் 1991-இல் உடைந்தபோது, அசர்பைஜான் தனிநாடாகியது. இந்த மாற்றத்தை அசர்பைஜான் எப்படி கொண்டாடியது தெரியுமா? ரஷ்யா ஏற்கெனவே அந்தப் பகுதியில் கட்டியிருந்த கட்டடங்களை இடித்து தள்ளியே மக்களின் கொண்டாட்டம் இருந்தது.

இன்றும் அசர்பைஜான்- ருமேனியா இடையே அவ்வப்போது போர் நடக்கிறது. இரு நாடுகளின் எல்லையில் உள்ள நாகர்னோ- காராபாக் மலை யாருக்கு சொந்தம் என்பதில்தான் பிரச்னை.

ஆனால் இதற்கு 500 கி.மீ. தொலைவில் உள்ள நகரம்தான் பாகூ. இங்கு எந்தப் பிரச்னையும் இல்லை.

முரட்டுத்தனமான காற்று இங்கு சகஜம். இதனால் "காற்று நகரம்' என அழைக்கின்றனர். கடல் மட்டத்தில் இருந்து 28 மீட்டர் கீழாக இந்த நகரம் அமைந்துள்ளது. இன்றுகூட உலகின் மொத்த எண்ணெய் உற்பத்தில் ஐந்தில் ஒரு பங்கு இங்குதான் கிடைக்கிறது.

எண்ணெயில் உருவான நகரம்தான் பாகூ. 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகின் பாதி எண்ணெயை பாகூதான் விநியோகம் செய்தது.

40 ஆயிரம் ஆண்டுகள் பழைய பாறை துகள்களை இன்றும் இங்கு காணலாம். இங்கு மண்ணை கக்கும் எரிமலைகளும் உண்டு. உலகில் மிகப் பெரிய மண் கக்கும் எரிமலை இந்தப் பகுதியில்தான் உள்ளது.

உலகின் முதல் ஏர்கண்டிஷனர் தொழிலகம் இங்குதான் தொடங்கப்பட்டது. 1823-ஆம் ஆண்டில் உலகின் முதல் மெழுகு தொழிற்சாலையும் இங்குதான் தொடங்கப்பட்டது. 1846-ஆம் ஆண்டில் உலகின் மிகப் பெரிய எண்ணெய் கிணறு இங்குதான் தோண்டப்பட்டது. 1878-ஆம் ஆண்டில் உலகின் முதல் ஆயில் டேங்கர் கப்பல் இங்கிருந்துதான் புறப்பட்டது.

நோபல் பரிசுக்கு பணத்தை அள்ளித் தந்த நோபலுக்கு பணம் கிடைக்க பாகூ எண்ணெய் கிணறுதான் உதவியது. முஸ்லிம் குடியரசு நாடாக இருந்தாலும், ஆண், பெண் என இரு பாலருக்கும் இடையே சம மதிப்பு உண்டு. எந்தக் கட்டுபாடுகளும் கிடையாது.

பார்முலா ரேஸ்கள் ஆண்டுதோறும் இங்கு நடைபெறுகின்றன. இந்த ரேஸில் மிக அதிகபட்சமாக மணிக்கு 378 கி.மீ. வேகத்தில் ஓட்டியதும் இங்குதான். கின்னஸ் புத்தகத்தில் கூட இது இடம்பெற்றுள்ளது.

கடலில் முதல் எண்ணெய் கிணறு தோண்டப்பட்டதும் இங்குதான். பின்னர், கடலிலேயே இதற்காக ஒரு நகரம் அமைக்கப்பட்டது. அதில், 5 ஆயிரம் பேர் நிரந்தமாகத் தங்கினர். இப்போது கணிசமான மக்கள் அங்கு வசிக்கின்றனர்.
பாகூவில் உள்ள அரண்மனை, மெயின் டவர் யுனெஸ்கோவின் பாரம்பரிய அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com