பழங்குடி பெண்ணாக மாளவிகா

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை மாளவிகா மோகனன்  ஒரே விதமான கதாபாத்திரங்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல், பலவிதமான பாத்திரங்களை ஏற்று,  சினிமா உலகில் தனக்கென
பழங்குடி பெண்ணாக மாளவிகா
Updated on
1 min read

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை மாளவிகா மோகனன்  ஒரே விதமான கதாபாத்திரங்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல், பலவிதமான பாத்திரங்களை ஏற்று,  சினிமா உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து ரசிகர்களை  உற்சாகப்படுத்தி வருகிறார். கவர்ச்சியான அவதாரங்களில் நடித்தாலும்,  உடனே அழுத்தமான பாத்திரத்திற்கு மாறும்  அவரது திறன் ஒரு நடிகையாக அவரது பன்முகத்தன்மையை நிரூபிக்கிறது.  பல்வேறு கதாபாத்திரங்கள் மற்றும் கதைகளில் தன் திறமையை நிரூபிக்க, அவர் எப்போதும் தயாராக இருக்கிறார்.

விக்ரமுடன் அவர் நடித்துள்ள "தங்கலான்' திரைப்படத்தில்,  ஒரு  பழங்குடிப் பெண்ணாகவே மாறியிருப்பது அவரது  அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. அவர் இப்படி மாறுவது இது முதல் முறையல்ல; உலகப் புகழ்பெற்ற இயக்குநர் மஜித் மஜிதி இயக்கிய அவரது முதல் படமான "பியாண்ட் தி க்ளவுட்ஸ்",  படத்திலேயே மிக கனமான  கதாபாத்திரத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ' பா ரஞ்சித் -  விக்ரம் கூட்டணியில்  இணைந்து பணிபுரிவது மிகவும் சந்தோஷம்.

எனக்கு கிடைத்த மிகப்பெரிய  வாய்ப்பாகும். பா ரஞ்சித் உடனான கூட்டணியில், என்னை வித்தியாசமான பாத்திரத்தில் பார்ப்பது ரசிகர்களுக்குச் சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கும்.  "தங்கலான்' படத்தில் தீவிரமான ஆக்ஷன் காட்சிகளில் நடித்திருக்கிறேன்.  இதை திரையில் பார்க்க பெரும் ஆவலாக உள்ளேன். இனி வரும் பயணங்களிலும் என்னை வித்தியாசப்படுத்தி காட்ட விரும்புகிறேன்'' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com