பிரபல பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் முருகேசனுக்கும் அவனது தந்தைக்கும் வீட்டில் நடைபெற்ற உரையாடல்.
'அப்பா உன்னை கணக்கு டீச்சர் பார்க்கணுமாம். நீ ஸ்கூலுக்கு வரணும்.''
' எதுக்குடா என்னை வரச் சொல்றாங்க?''
'கிளாஸில் ஒரு கேள்வி கேட்டாங்க? 9- ஐ 7 ஆல் பெருக்கினால் என்ன வரும்னு..?''
'63ன்னு சொன்னேன்...''
'சரி அப்புறம்... ''
'7 ஐ 9 ஆல் பெருக்கினால் என்ன வருமுன்னு கேட்டாங்க?''
'அதே தானேடா வரும்... சரி நீ என்ன சொன்னே.?''
" "அப்பா.. "அதே தானேடா வரும்'-ன்னு நானும் சொன்னேன். உன்னை வந்து பார்க்கச் சொல்லிட்டாங்க?''
'சரி, சரி.. நாளைக்கு வரேன்.''
அடுத்த நாள் வீட்டில் இருவருக்கும் நடைபெற்ற உரையாடல்.
'அப்பா, ஸ்கூலுக்கு வந்து டீச்சரை பார்த்தியா?''
'இல்லைடா நாளைக்கு வரேன்.''
'நாளைக்கு கணக்கு டீச்சரை பாத்துட்டு, அப்படியே பி.டி. டீச்சரையும் பாத்துடு...''
'எதுக்குடா?''
'முதல்ல வலது கையைத் தூக்கச் சொன்னாரு, செஞ்சேன். அப்புறம் இடது கையைத் தூக்கச் சொன்னார். செஞ்சேன். ரெண்டு கையையும் தூக்கிட்டே... வலது காலை தூக்கச் சொன்னாரு, தூக்கினேன்... அப்புறம் இடது காலை தூக்குன்னு சொன்னாரு...?''
'ரெண்டு காலையும் தூக்கிட்டு எப்படி நிற்க முடியும்? லூசா அவன்? சரி நீ என்ன பண்ணுன?''
'நீங்கச் சொன்னதையேதான்பா சொன்னேன். உங்கப்பாவை கூட்டிட்டு வான்னு சொல்லிட்டாரு?''
'சரி சரி... நாளைக்கு வந்து பாக்கறேன்.''
அதற்கு அடுத்த நாள்.
'இன்னிக்கு ஸ்கூலுக்கு போனியாப்பா??''
'இல்லடா நாளைக்கு வரேன்..''
'நீ போக வேணாம்பா...?''
' ஏன்டா?''
'ஸ்கூலேர்ந்து என்னை டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க...?''
' ஏன்...? என்னாச்சுடா?''
'ப்ரின்சிபல் ரூமுக்கு வரச் சொன்னார். அங்க கணக்கு டீச்சர், பி.டி. டீச்சர், சயின்ஸ் டீச்சர் மூணு பேரும் இருந்தாங்க...?''
'சயின்ஸ் டீச்சரா... அந்த நாய் ஏன்டா அங்க இருந்தான்?''
'அதைத் தான்பா நானும் கேட்டேன்...''
'டிஸ்மிஸ் பண்ணி வீட்டுக்கு அனுப்பிட்டாங்க...?''
பெற்றோரிடம் கற்றபடியே பிள்ளைகளும் வளர்கிறார்கள். பெற்றோரிடம் கேட்டதையே பிள்ளைகளும் பேசுகிறார்கள்.
(படித்ததில் பிடித்தது)
-எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.