ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள நாடு கொமோரோஸ். இந்திய பெருங்கடலின் மொசாம்பிக் கால்வாயின் வடக்கு முனையில் மடகாஸ்கர், அருகில் இந்தப் பகுதி உள்ளது.
கிராண்ட் கொமோர், மொஹெலி, அஞ்சோவான் ஆகிய மூன்று தீவுகளை உள்ளடக்கியவைதான் இந்த நாடு. இதில், மக்கள் அதிகம் வசிப்பது மொரோனியில்தான்! "கொமோரோக்கள்' என இவர்கள் அழைக்கப்படுகிறார்கள். ஆறாம் நூற்றாண்டிலிருந்தே இந்தியாவுடனான வணிகம் நடைபெற்றுள்ளது.
சுமார் 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே எரிமலைகள் இங்கிருந்து, காலம் காலமாய் கக்கி ஓய்ந்துவிட்டன. இன்றோ பசுமையான காடுகள்,பவளப் பாறைகள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் நடை பயணம், ஸ்நோர்கெல்லிங், டைவிங்குக்குப் பிரபலமான இடம். இங்கு இன்றும் நீரில் மூழ்கியுள்ள எரிமலை உள்ளது.
முஸ்லிம் குடியரசு.அரபு லீக்கில் இணைந்துள்ளது. குறிப்பாக, இந்த நாட்டில் இன்றும் 250-க்கும் அதிகமான இந்தியர்கள் உள்ளனர்.
இங்கு இயற்கையாகவே வாசனை தாவரங்கள் நிறைய வளர்கின்றன. அதனால் இந்தப் பகுதிக்கு மணக்கும் தீவுகள் என பெயருண்டு. மசாலா பொருள்கள், கிராம்பு வளர்கின்றன.
இங்கு பல வகையான திமிங்கிலங்கள்,கடல் பச்சை ஆமைகள், கடற்பாசி படுகைகள், லெமூர்கள், வெளவால்கள், 750-க்கும் மேற்பட்ட கடல் மீன்கள், எட்டு கடல் புல் இனங்கள், கண்களைக் கவரும் பவளப் பாறைகள்,கிரிஸ்டல் சுத்த கடற்கரைகள், நீர், விளிம்புப் பாறைகள் எனப் பார்க்க ஏராளம் உண்டு. இருப்பினும், இங்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவுதான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இளஞ்சிவப்பு வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா் ஆய்வு

நெய்வேலியில் திமுக-அதிமுக நேரடி பலப்பரீட்சை...!

போக்குவரத்து நெரிசலுக்கு புதிய பேருந்து நிலையமே நிரந்தரத் தீா்வு!

கவனம் ஈர்க்கும் சேலம் எடப்பாடி தொகுதி!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

