நூதன ஓடுகள்..

இன்றைக்குப் பயன்பாட்டில் இருக்கும் மங்களுரு ஓடுகள் கோடை காலத்தில் சிறந்த காற்றோட்டத்தைத் தருகின்றன.
மங்களுரு ஓடுகள்
மங்களுரு ஓடுகள்
Published on
Updated on
1 min read

இன்றைக்குப் பயன்பாட்டில் இருக்கும் மங்களுரு ஓடுகள் கோடை காலத்தில் சிறந்த காற்றோட்டத்தைத் தருகின்றன. அதிக மழை பொழியும் இடங்கள், கடற்கரை நகரங்களில் இன்றும் பயன்படுத்தப்படுகின்றன.

1865-இல் மங்களுரில் ஓடும் குருபுரா, நேத்ராவதி ஆற்றங்கரையிலிருந்து களிமண் எடுக்கப்பட்டு, உரிய வடிவத்தை உருவாக்கிச் சுடப்பட்டது. முதலில் இரண்டு தொழிலாளர்களைக் கொண்டு இயங்கியது. இதை சற்று மாற்றி வடிவமைத்து, தற்போது பயன்பாட்டில் உள்ள மங்களூரு ஓடுகளை வில் ஹெல்ம் லுடோவிசி என்பவர் 1881-இல் கண்டுபிடித்தார். பின்னர், இவை இன்டர்லாக் டைல்ஸ்ஸை உருவாகின.

ஆங்கிலேயர் ஆட்சியின்போது, அரசு கட்டடங்களுக்கு இவை மட்டுமே பரிந்துரைக்கப்பட்டன.

சத்ரபதி சிவாஜி ரயில் நிலையமும் இந்த வகை ஓடுகளால் கட்டப்பட்டு, தற்போதும் சிறந்த முறையில் உள்ளது. இதனால் மங்களுரு பாணி ஓடுகள் பிரபலமாயின. நிறைய தொழிலகங்கள் வர ஆரம்பித்தன.

இந்த ஓடுகள் இலங்கை, தூர கிழக்கு நாடுகள், கிழக்கு ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு ஐரோப்பா, ஆஸ்திரேலியாவிலும் மங்களுரு ஓடுகள் பிரபலம் அடைந்து, ஏற்றுமதியும் அதிகரித்தது. அவற்றின் உயர் தரத்தால் கான்கிரீட்டை விட இதனை விரும்பினர்.

நீண்ட ஆயுளைத் தரும். 45 டிகிரி சாய்வாகப் பொருத்தப்படுவதால் மழைநீர் தங்காது. ஒழுகல் கிடையாது. களிமண்ணில் லேட்டரைட் உள்ளதால், இரும்புச் சத்து சேர்ந்து கற்களை சிவப்பு நிறமாக அழகூட்டுகின்றன. ஒரு ஓடு இரண்டு முதல் மூன்று கிலோ வரையில் எடை இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com