சி.என்.ஜி. பைக்

இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், 'சி.என்.ஜி.' எனப்படும் அமுக்கப்பட்ட இயற்கை எரிகாற்றில் இயங்கும் பைக் புதியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
சி.என்.ஜி. பைக்
Picasa
Updated on
2 min read

இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், 'சி.என்.ஜி.' எனப்படும் அமுக்கப்பட்ட இயற்கை எரிகாற்றில் இயங்கும் பைக் புதியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒரு வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட பெட்ரோலில் இயங்கும் இரு சக்கர வாகனங்கள் இருக்கின்றன. சாலைகளில் புற்றீசல்கள் போல இரு சக்கர வாகனங்கள் செல்கின்றன.

பெட்ரோல் விலை அதிகம் என்பதால், சாதாரண மக்களுக்கு செலவு அதிகமாகிறது. இவர்களுக்கு ஆசுவாசம் தரும் விதமாக, மின்சாரத்தை சார்ஜ் செய்து பேட்டரியால் இயங்கும் இருசக்கர வாகனங்கள் சந்தையில் அறிமுகமாகின்றன. அவற்றின் விலை அதிகம் என்பதால், பெட்ரோல் வாகனங்களின் விற்பனையே முன்னிலையில் உள்ளது.

இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில், 'சி.என்.ஜி.' எனப்படும் அமுக்கப்பட்ட இயற்கை எரிகாற்றில் இயங்கும் பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. 'சி.என்.ஜி.' என்பது பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி. போன்ற எரிபொருள்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் புதைபடிவ எரிமங்களுள் ஒன்று. விலையும் மிகக் குறைவு. 'சி.என்.ஜி.' யால் இயங்கும் பைக்கை முதல் முதலாகக் கண்டுபிடித்திருப்பது'பஜாஜ் ஆட்டோ' நிறுவனம்தான்.

'சி.என்.ஜி.'யால் இயங்கும் பேருந்துகள், கார்கள், ஆட்டோக்கள் சந்தையில் விற்பனையாகின்றன. ஆனால் 'சி.என்.ஜி.' யை தேக்கி வைக்கப் பயன்படும் உருளைகள் அதிக இடம் பிடிப்பதால் பிடிப்பதால், கார்களில் அதிக சாமான்கள் வைக்க முடியாது. அதனால் 'சி.என்.ஜி.' யால் இயங்கும் கார்களின் எண்ணிக்கை குறைவு. 'சி.என்.ஜி., வாயு மூலம் இயங்கும் ஆட்டோக்களில் பெரும்பாலானவை 'பஜாஜ்' நிறுவனம்

உருவாக்கியவைதான். அந்தத் தொழில்நுட்ப அனுபவத்தைப் பயன்படுத்தி, 'சி.என்.ஜி.' யால் இயங்கும் பைக்கை 'ஃபிரீடம் 125' என்ற பெயரில் சந்தையில் அறிமுகம் செய்துள்ளனர்.

பெட்ரோலில் இயங்கக் கூடிய இரு சக்கர வாகனத்துக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ஆகும் சராசரி செலவு இரண்டேகால் ரூபாய் ஆகும். அதே சமயம், 'சி.என்.ஜி.'யால் இயங்கும் பைக் ஒரு கிலோ மீட்டர் தூரம் பயணிக்க ஒரு ரூபாய்தான் செலவாகும். அதனால் இந்தியாவின் அந்நியச் செலவாணி மிச்சமாகும். பயனாளர்களுக்கும் பயணச் செலவு ஐம்பது சதவீதம் குறையும்.

'ஃப்ரீடம் 125' பைக்கில் இரண்டு எரிபொருள் டேங்க்குகள் பொருத்தப்பட்டிருக்கும். ஒரு டேங்க்கில் இரண்டு லிட்டர் பெட்ரோல் போட்டுக் கொள்ளலாம். இரண்டாவது டேங்க்கில் இரண்டு கிலோ எடையுள்ள 'சி.என்.ஜி.' வாயுவை நிரப்பிக் கொள்ளலாம். 'சி.என்.ஜி.' வாயுவால் வண்டி இயங்குவதில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், பெட்ரோல் மூலம் வண்டியை இயக்கி பயணத்தை இடையூறு நேர விரயம் இல்லாமல் தொடரலாம்.

'சி.என்.ஜி.' வாயுவிலும் கார்பன் இருந்தாலும், அளவு குறைவாக இருக்கும். அதனால் பெட்ரோலில் இயங்கும் வாகனங்களைவிட 'ஃப்ரீடம் 125' பைக் வெளியிடும் மாசு குறைவாகவே இருக்கும். வரும் நாள்களில் பெட்ரோலுக்குப் பதிலாக 'எதனால்' எரிபொருளை ஊற்றி பைக்கை இயக்குவார்கள்.

'ஃப்ரீடம் 125' வாகனத்தின் விலை சுமார் ஒரு லட்சம். தொடக்கத்தில் மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்களில் விற்பனையாகும். நாடு முழுவதிலும் விரைவில் விற்பனை தொடங்குவதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியும் செய்யப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com