செஸ் சாம்பியனாவேன்..!

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இளம் வயதில் ஆடினாலும், மேலும் அனுபவம் தேவைப்படுகிறது. நடப்பு சாம்பியன் டிங் லிரேன் ஒருங்கிணைந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்.
டிங் லிரேன்
டிங் லிரேன்
Updated on
1 min read

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இளம் வயதில் ஆடினாலும், மேலும் அனுபவம் தேவைப்படுகிறது. நடப்பு சாம்பியன் டிங் லிரேன் ஒருங்கிணைந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். இருப்பினும், நான் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது'' என்கிறார் டி. குகேஷ்.

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் கடந்த மாதம் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் குகேஷ் இடம் பெற்ற இந்திய அணி தங்கம் வென்றது.

இந்நிலையில் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வெற்றியாளராக வந்த நிலையில், உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றார். சிங்கப்பூரில் வரும் நவம்பர் 25-இல் நடைபெறவுள்ள இப்போட்டியில் நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரேனோடு மோதுகிறார் குகேஷ். அவர் எலோ ரேட்டிங் 2794.1 புள்ளிகளுடன் உள்ளார்.

டிங் லிரேனைவிட மிகவும் இளவயது வீரர் குகேஷ். பதினெட்டே வயதே ஆன குகேஷ், இந்தப் போட்டியில் பட்டம் வென்றால், "இளம் வயதில் உலக சாம்பியன்' பட்டம் வென்ற முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார். இதுதொடர்பாக குகேஷ் கூறியதாவது:

கேண்டிடேட்ஸ் போட்டியில் வென்று, உலக சாம்பியன்ஷிப் போட்டி தகுதி பெற்றது மிகவும் பெருமையாக உள்ளது. எனினும் கூடுதல் பொறுப்பு வந்து விட்டது. உலக சாம்பியன்ஷிப் போட்டி மிகவும் கவனமாக ஆட வேண்டியுள்ளது.

நிகழாண்டு இதுவரை ஆடிய அனைத்து போட்டிகளிலும் சிறப்பாகச் செயல்பட்டேன்.

சிங்கப்பூர் போட்டியில் பட்டம் வெல்ல எனக்கு வாய்ப்புள்ளதாக அனைவரும் கூறி வருகின்றனர். எனினும் எதிர்தரப்பு வீரர் டிங் லிரேனை குறைத்து மதிப்பிடவில்லை.

இந்தப் போட்டிக்கு கடும் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். டிங் லிரேனும் வலுவான வீரர்தான்.

இந்தியாவுக்காக இத்தகைய பெரிய போட்டியில் பங்கேற்பது மிகவும் மகிழ்ச்சி தருகிறது. மக்களும், எனது சக வீரர், வீராங்கனைகளும் உற்சாகம் தருகின்றனர்.

பல சர்வதேச ஆட்டங்களில் ஆடியிருந்தாலும், உலக சாம்பியன்ஷிப் என்பது வித்தியாசமான அனுபவமாகும். இளம் வயதில் ஆடினாலும், மேலும் அனுபவம் தேவைப்படுகிறது. நடப்பு சாம்பியன் டிங் லிரேன் ஒருங்கிணைந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்'' என்கிறார் குகேஷ்.

போட்டியின் சிறப்புகள்:

சிங்கப்பூரின் புகழ் பெற்ற சென்டோஸா ஹோட்டலில் நவம்பர் 25 முதல் டிசம்பர் 15 வரை இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு உலக சாம்பியன்ஷிப்பிலும் கண்டிப்பாக ஐரோப்பிய வீரர் இடம் பெற்றிருப்பார். ஆனால் 138 ஆண்டுகளில் முதன்முறையாக இரு ஆசிய வீரர்கள் பங்கேற்கின்றனர்.

முதன்முதலில் 1886-இல் உலகப் போட்டி நடைபெற்றது. இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் ஐந்து முறை பட்டம் வென்றுள்ளார். 14 கிளாஸிக்கல் சுற்றுகள் அடிப்படையில் போட்டி நடைபெறும். 7.5 புள்ளிகளைப் பெறும் முதலில் பெறும் வீரர் உலக சாம்பியன் ஆவார். முதல் 40 நகர்த்தல்

களுக்கு 120 நிமிஷங்களாகும். 41- ஆவது நகர்த்தலுக்கு முன்பு இரு வீரர்களும் டிரா செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

சாம்பியனுக்கு பரிசுத் தொகை 2.5 லட்சம் அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்திய மதிப்பில் ரூ.2 கோடியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com