தூக்கத்தைத் தவிர்க்கும் உயிரினங்கள்..!

தூக்கம் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல; உயிரினங்களுக்கும் இன்றியமையாதது.
யானைகள்
யானைகள்
Published on
Updated on
1 min read

தூக்கம் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல; உயிரினங்களுக்கும் இன்றியமையாதது. தூக்கத்தின் மூலமே உடலைப் புதுப்பித்துகொள்ளவும் நோய்த் தாக்கத்தில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழவும் முடியும்.

ஒவ்வொரு உயிரினங்களும் தனித்துவமான தூக்க முறைகளைக் கொண்டிருக்கின்றன. அவற்றுள் சில உயிரினங்கள் குறைந்த நேரமே தூங்குகின்றன. சில உயிரினங்கள் தூக்கத்தைக் கூட ஓய்வான பொழுதாகவே கருதுகின்றன. இத்தகைய உயிரினங்கள் குறித்து அறிவோம்.

யானைகள்: யானைகள் குறுகிய நேரமே தூங்கும் இயல்புடையவை. தினமும் இரண்டு மணி நேரம் வரையே ஓய்வெடுக்கும். அடிக்கடி இடம்பெயர்ந்து கொண்டிருப்பதாலும், தீவனத்துக்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதாலும் குறைந்த நேரமே தூங்குகின்றன.

ஒட்டகச் சிவிங்கிகள்: இவை தினமும் சில நிமிடங்கள் முதல் இரண்டு மணி நேரம் வரையே தூங்குவதற்கு நேரம் ஒதுக்கும். குறுகிய நேரத் தூக்கமே இவற்றுக்குப் போதுமானது. உயரமான கழுத்தைக் கொண்டிருக்கும் ஒட்டகச் சிவிங்கிகள் வேட்டையாடுபவர்களிடம் இருந்து தப்பிப்பதற்கும், உடல் சமநிலையைப் பேணுவதற்கும் தூங்காமல் விழிப்புநிலையைக் கடைப்பிடிக்கின்றன.

சுறா மீன்கள்: சில சுறா இனங்கள் சுவாசிப்பதற்கு நகர்ந்துகொண்டே இருக்கும். அதனால் தூங்குவதற்கு விரும்பாது. அதற்குப் பதிலாக அதன் இயக்கச் செயல்பாடுகளைக் குறைத்துகொள்ளும். முழுமையாகத் தூங்காது.

எறும்புகள்: சில எறும்பு இனங்கள் நம்ப முடியாத அளவுக்கு குறுகிய தூக்கச் சுழற்சி நேரத்தைப் பின்பற்றுகின்றன. அதிலும், ராணி எறும்புகள் மிகவும் குறுகிய நேரமே தூங்கும் மற்ற எறும்புகள் வேலை செய்கிறதா? என்பதைக் கண்காணிப்பதற்காக, நீண்ட நேரம் விழித்திருக்கும்.

குதிரைகள்: குதிரைகளால் நின்று கொண்டே தான் தூங்க முடியும். தினமும் இரண்டு மணி நேரம் தூங்குவதே அவைகளுக்குப் போதுமானது. எதிரிகளிடம் தப்பிப்பதற்காக விழிப்புநிலையில் தங்களைப் பாதுகாப்பதற்காக இந்த அணுகுமுறையை அவை கொண்டிருக்கின்றன.

மான்கள்: இவற்றின் தூங்கும் நேரம் மிகவும் குறைவாகும். எப்போதும் விழிப்புநிலையிலேயே தங்களை வைத்திருக்கும். வேட்டையாடுபவர்களிடம் தப்பிதற்காக, எந்த நேரத்திலும் எச்சரிக்கை நிலையிலேயே இவை இருக்கும். அடிக்கடி இடம் பெயர்ந்துகொண்டிருக்கும்.

டால்பின்கள்: இவை ஒருபோதும் ஆழ்ந்த தூக்கத்தை அனுபவிப்பதில்லை. பாதி தூக்கத்தையே விரும்பும். தூங்கும்போது மூளையின் ஒருபகுதி மட்டுமே ஓய்வுநிலையில் இருக்கும். மற்றொரு பகுதி விழிப்புநிலையில் இருக்கும். தொடர்ந்து சீராகச் சுவாசிப்பதற்கும் எதிரிகளிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துகொள்வதற்கும் இத்தகைய விழிப்புநிலையைக் கடைப்பிடிக்கின்றன.

ஆல்பைன் ஸ்விப்ட்ஸ்: இந்தப் பறவையால் தரையிறங்காமல், பல மாதங்கள் பறக்க முடியும். பறக்கும்போத காற்றின் அசைவில் இறகுகளை மிதக்கவிட்டு தூக்கமும் போட்டுவிடும். குறுகிய நேரமே தூங்கும்.

நீண்ட தூரம் பறந்து புலம் பெயர்ந்து வாழ்வதற்கேற்க உடலமைப்பையும், வான் பகுதியிலேயே பறந்தபடி தூங்குவதற்கான தகவமைப்பையும் இந்தப் பறவைகள் கொண்டிருப்பது சிறப்பு அம்சமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com