
வடிவேலு - பகத் பாசில் இருவரின் நடிப்பில் உருவாகியுள்ள 'மாரீசன்' எதிர்வரும் 25-ஆம் தேதியன்று வெளியாகிறது. சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் இயக்குநராகப் பணியாற்றியுள்ள இப்படத்தில் கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன் , ரேணுகா, சரவண சுப்பையா , கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஸ்ரீ ஜித் சாரங் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்ள, மகேந்திரன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். கிராமிய பின்னணியிலான ட்ராவலிங் திரில்லராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி தயாரித்திருக்கிறார்.
சசிகுமார் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் நடிப்பில், 'கழுகு' பட இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் 'ப்ரீடம்'. இத்திரைப்படம் கடந்த ஜூலை 10 -ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இதில் பேசிய சசிகுமார், '1995-இல் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். கற்பனை கலந்த கதாபாத்திரங்கள் நடித்தால் எப்படி இருக்கும் என்பதை வைத்துதான் இயக்குநர் இதை இயக்கியிருக்கிறார். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. கதாநாயகனாக இருப்பதைவிட கதையின் நாயகனாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால் இதுபோன்ற படங்களில் நடிக்க முடிகிறது' என்று பேசியிருக்கிறார்.
சமீபத்திய பேட்டியில் ராஷ்மிகா மந்தனா, 'எங்களுடைய கொடவா சமூகத்திலிருந்து எனக்கு முன் சினிமாவிற்குள் யாரும் வந்ததில்லை. எங்கள் சமூகத்திலிருந்து சினிமாவுக்கு வந்த முதல் நபர் நான்தான் என நினைக்கிறேன்.' எனக் கூறியிருந்தார்.
ராஷ்மிகாவின் இந்தக் கருத்துக்கு கொடவா சமூகத்தைச் சேர்ந்த நடிகர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதனைத் தொடர்ந்து 'கொடவா சமூகத்தைச் சேர்ந்த பலரும் சினிமாவிற்குள் வந்து சோபித்திருக்கிறார்கள்.' என்றார்.
இவரைத் தொடர்ந்து மாடல் மற்றும் கன்னட சினிமாவின் நடிகையுமான நிதி சுப்பையா, 'ராஷ்மிகா சொல்வது ஜோக் போல இருக்கிறது. அவர் அப்படியான கருத்தை வைத்ததாலேயே அது உண்மையாகிவிடாது. நடிகை பிரேமா கொடவா சமூகத்திலிருந்து சினிமாவுக்கு வந்து சூப்பர் ஸ்டார் ஆகியிருக்கிறார். இருப்பினும், ராஷ்மிகா ஏன் அப்படியான கருத்தைச் சொன்னார் எனத் தெரியவில்லை.' எனத் தெரிவித்திருக்கிறார்.
பி.டி.அரசகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் நடிகைகள் ஷிவதா மற்றும் ரம்யா பாண்டியன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் 'கயிலன்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
ஜூலை 25-ஆம் தேதியன்று வெளியாகும் இப்படத்தில் ஷிவதா, ரம்யா பாண்டியன், பிரஜின், மனோபாலா, ஞானசம்பந்தம், அபிஷேக் ஜோசப், அனுபமா குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அமீன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு கார்த்திக் ஹர்ஷா, ஹரி எஸ்.ஆர். இசையமைத்திருக்கிறார்கள்.
விறுவிறுப்பான திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிடும் விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் கே பாக்யராஜ், கெளரவ் நாராயணன், தயாரிப்பாளர்கள் கே ராஜன், தனஞ்செயன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.