அன்றும் இன்றும்...

தனது குடும்பத்தை காப்பாற்ற கேதார்நாத்துக்கு வருகை தரும் யாத்ரீகர்களை கோவேறு கழுதைகளில் ஏற்றிக் கொண்டு கோயில்களுக்கு அழைத்துச் செல்லும் வேலையைச் சிறு வயதிலிருந்து செய்துவந்தவர் அதுல் குமார்.
அன்றும் இன்றும்...
Published on
Updated on
2 min read

தனது குடும்பத்தை காப்பாற்ற கேதார்நாத்துக்கு வருகை தரும் யாத்ரீகர்களை கோவேறு கழுதைகளில் ஏற்றிக் கொண்டு கோயில்களுக்கு அழைத்துச் செல்லும் வேலையைச் சிறு வயதிலிருந்து செய்துவந்தவர் அதுல் குமார். இருபத்தொன்று வயதாகும் அவர், தற்போது சென்னை ஐ.ஐ.டி.யில் படித்துவருகிறார்.

அவர் கூறியது:

'உத்தரகண்ட் மாநிலத்தின் பாசுகேதர் பகுதியில் உள்ள வீரோன் தேவால் கிராமம்தான் எனது சொந்த ஊர்.

கேதார்நாத்தில் ஜோதிர்லிங்க கோயில், பைரவநாத் கோயில், சங்கராச்சார்யா நினைவிடம் உள்ளிட்ட பல தீர்த்தத் தடாகங்களில் காண வருகை தரும் யாத்ரீகர்களை அழைத்துச் செல்ல தினமும் 30 கி.மீ. கோவேறு கழுதைகளுடன் ஊர் மக்கள் அழைத்துகொண்டு, நடந்து செல்வர். எனது தந்தையும் இந்த வேலையைச் செய்து வந்தார்.

2013-இல் கேதார்நாத்தை வெள்ளம் நாசம் செய்தது. அப்பா வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, ஐந்து நாள் கழித்து பலத்த காயங்களுடன் வீடு திரும்பினார். அவர் நலம் பெற பல மாதங்கள் ஆகின. அடுத்த வருடம், அவரது கால் உடைந்தது. அதனால் யாத்ரீகர்களை கோவேறு கழுதைகளின் கொண்டு செல்லும் வேலையை அவரால் செய்ய முடியவில்லை.

மூன்று ஆண்டுகளாக, நாங்கள் குடும்பத் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தவித்தோம். நான் தினசரி கூலி வேலையை மேற்கொண்டேன், பின்னர் கோவேறு கழுதைகளை பத்து வயதில் வழிநடத்த ஆரம்பித்தேன். எங்களுக்குச் சொந்தமான இரண்டு கோவேறு கழுதைகளைப் பராமரிக்கவும் வேண்டும். விடுமுறை நாள்களில் அதிகாலையில் வேலைக்கு கிளம்புவேன். அப்போதுதான் சீக்கிரம் வீடு திரும்ப முடியும். படிக்கவும் நேரம் கிடைக்கும். தினமும் ஒரு சவாரிதான் போக முடியும்.

இதன்மூலம் வரும் வருவாயில்தான் வாழ்வாதாரத்தை நானும் தம்பியும் சமாளிக்கிறோம். இந்த வேலையும் வருடத்தில் நான்கு மாதங்கள் மட்டுமே இருக்கும். இதர மாதங்களில் வேறு ஏதாவது வேலைகளை நானும், தம்பியும் செய்து வருகிறோம்.

உடல் வலி இருக்கும். ஒய்வு எடுத்தால் நல்லது என்று தோன்றும். ஆனால் எனது ஐஐடி லட்சியம் என்ன ஆவது? அதனால், இரவில் நான்கு முதல் ஐந்து மணி நேரம் படிக்க உட்காந்துவிடுவேன். என் லட்சியத்தில் சமரசம் செய்யக் கூடாது என்று முடிவு செய்து தீவிரமாகப் படித்தேன். பல நேரங்களில், குடும்பப் பொறுப்புகள், பணத் தட்டுப்பாடு என்னை தளர்த்தும். ஆனாலும், என் இலக்கை நான் மறக்கவில்லை.

படிப்புச் செலவுக்கு நான் என் தந்தையிடம் எதையும் கேட்க முடியாது. அவர் ஏற்கெனவே எனது படிப்புக்காக அதிகமாகச் செலவு செய்துவிட்டார். சென்னையில் கல்விக்காக வங்கியில் கல்விக் கடன் வாங்க முயன்று வருகிறேன். எனது தம்பியிடம், " தொடர்ந்து படிக்க வேண்டும். படித்தால் மட்டுமே வாழ்க்கையில் உயர முடியும்' என்று சொல்லி வருகிறேன் என்கிறார் அதுல்குமார்.

'மற்றவர்களை போல, அதுல் ஒருபோதும் சமூக ஊடகங்களின் "ரீல்'களுக்கு போஸ் கொடுத்ததில்லை. தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பார். அதுல் தனது இலக்கைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டிருந்தார்'' என்கிறார் அதுல்குமாரின் தந்தை பிரகாஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com