வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

கிராமத்து பின்னணியில் அமானுஷ்ய கதை

பிற மொழிகளின் உயிர்த் துடிப்பான படைப்புகள் தமிழில் வெளியாகி வெற்றி பெறுவது இப்போது சகஜமாகி வருகிறது.

News image
Updated On :22 ஜூன் 2025, 3:03 pm

பிற மொழிகளின் உயிர்த் துடிப்பான படைப்புகள் தமிழில் வெளியாகி வெற்றி பெறுவது இப்போது சகஜமாகி வருகிறது. அந்த வகையில் கன்னடத்தில் இருந்து தமிழில் வெளியாகவிருக்கும் படம் 'கரிகாடன்'. ஆக்ஷன் மற்றும் அமானுஷ்யமும் நிறைந்த ஒரு பரபரப்பான திரைக்கதை இப்படத்துக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் கடா நடராஜ், நிரிஷா ஷெட்டி, ரித்தி, மஞ்சு சுவாமி, யாஷ் ஷெட்டி, கோவிந்த கவுடா, திவாகர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்கியுள்ளார் கில்லி வெங்கடேஷ்.

ரித்தி எண்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் தீப்தி தாமோதர் தயாரித்துள்ளார். படம் குறித்து இயக்குநர் பேசும் போது...'' இசையையும் சிலிர்ப்பையும் இணைக்கும் இப்படத்தின் சாகச மற்றும் அதிரடிப் பயணத்தைத் திரையரங்கில் காணலாம். அதிரடி ஆக்ஷன் காட்சிகள், அசத்த வைக்கும் இசை என்று திரை மாயாஜாலத்தை உணர வைக்கும் ஒரு படைப்பாக இந்தப் படம் உருவாகி உள்ளது.

கார்ப்பரேட் உலகத்தைச் சேர்ந்த ஆர்வமுள்ள கலைஞரான கடா நட்ராஜ், தனது கனவைப் பெரிய திரையில் நனவாக்க வந்துள்ளார். இந்தப் படத்தின் கதையை எழுதியுள்ள கடா நடராஜ் கவனமாகத் திட்டமிடப்பட்டு படப்பிடிப்பை முடித்தார்.

கன்னடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்திழுக்கும்'' என்றார் இயக்குநர். பாடல்களுக்கு அதிஷய் ஜெயின் இசையமைக்கிறார்கள். பின்னணி இசையை ஷாங்க் சேஷகிரி வடிவமைத்துள்ளார்.

ஜீவன் கவுடாவின் ஒளிப்பதிவில் கர்நாடகாவின் சிக்கமகளூரு, கலாசா, குத்ரேமுக், மண்டியா மற்றும் சிக்கராயபட்னா போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. தீபக் சி.எஸ்.ஸின் படத்தொகுப்பு செய்துள்ளார். படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ள நிலையில், படம் விரைவில் தமிழகத்தில் வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.