அறிவியல் பரப்பும் ஆரோவில் ஸ்டெம்லேண்ட்

கிராமத்து இளைஞர்களுக்கான தொழிற்கல்வியை புதுவை அருகேயுள்ள ஆரோவில்லின் ஸ்டெம்லேண்ட் கற்பிப்பதுடன், தற்கால அறிவியல் தொழில்நுட்பத்தை நடைமுறையில் உள்ள பயன்பாட்டுப் பொருள்களுக்கு ஏற்ப வடிவமைப்பதிலும் பெரிதும் முன்னேற்றத்தைக் கண்டுவருகிறது.
அறிவியல் பரப்பும் ஆரோவில் ஸ்டெம்லேண்ட்
Published on
Updated on
2 min read

கிராமத்து இளைஞர்களுக்கான தொழிற்கல்வியை புதுவை அருகேயுள்ள ஆரோவில்லின் ஸ்டெம்லேண்ட் கற்பிப்பதுடன், தற்கால அறிவியல் தொழில்நுட்பத்தை நடைமுறையில் உள்ள பயன்பாட்டுப் பொருள்களுக்கு ஏற்ப வடிவமைப்பதிலும் பெரிதும் முன்னேற்றத்தைக் கண்டுவருகிறது. இதனால், ஆரோவில் சர்வதேச ஒருமைப்பாட்டின் அடையாளமாக மட்டுமின்றி அறிவியல் அற்புத இடமாகவும் திகழ்கிறது.

இங்கு 2015- ஆம் ஆண்டு முதல் ஸ்டெம்லேண்ட்' மூலம் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றை இணைத்து ஆய்வு மேற்கொண்டு, பாடத் திட்டத்தை உருவாக்கி அதை நடைமுறை வாழ்வியலில் பயன்படுத்துவது குறித்த நுட்பத்தைக் கற்றுத் தருகிறது. இந்தப் பாடத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு ஸ்ட்ரீம்' எனப்படும் நிறுவன ஆய்வாளர்கள் மாணவர்களுக்கு உதவியும் வருகின்றனர்.

இதுகுறித்து தொழில்நுட்பக் கல்லூரி பேராசிரியர் டி. அமர்நாத்திடம் பேசியபோது:

ஆரோவில் ஆன்மிக, கலாசார, பண்பாட்டு நகராக மட்டுமின்றி நவீனத் தொழில்நுட்பத்தைச் சாமானியரும் பயன்படுத்தும் வகையிலான அறிவியல் ஆய்வு மையமாக உள்ளது.

ஆரோவில் அறக்கட்டளை சார்பில் ஸ்ரீ அரபிந்தோஇன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் எஜுகேஷனல் ரிசர்ச்' (எஸ்.ஏ.ஐ.ஐ.இ.ஆர்.) வழிகாட்டுதலில் 15 பள்ளிகளும், தொழில்நுட்பக் கல்லூரியும் செயல்படுகின்றன. அதில் ஸ்டெம்லேண்ட்' எனப்படும் ஆரோவில் அமைப்பால் உருவாக்கப்பட்ட புதிய பாடத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் ஒரு அமைப்பு சமூகத்துக்கான பாடத் திட்டத்தை அறத்தின் அடிப்படையில், தர்மச் சிந்தனையைப் பாதுகாக்கும் நோக்கில் கற்கும் தளத்தில் பாடத்திட்டத்தை உருவாக்கி அதை செயல்படுத்துவது என்பது சாதாரணமானதல்ல. அதுவும் அடித்தள சமூகத்துக்கான கல்வி என்பதால் அதை அனைத்துத் தரப்பினருமே ஏற்று, பாராட்டியுள்ளனர்.

மண்ணுக்கான அறிவியல் தொழில்நுட்பக் கல்வி' என்பதே ஆங்கிலத்தில், ஸ்டெம்லேண்ட்' என பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

ஆரோவில் தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு 2 மாதங்கள் கட்டாயத் தொழில்நுட்பப்பயிற்சி அளிக்கப்படுகிறது.அதன்படி சி3 ஸ்ட்ரீம்' எனப்படும் நிறுவன ஆய்வாளர்கள் அறிவியல், தொழில்நுட்பம், ஆய்வு, பொறியியல், கலை, கணிதம் என்ற அடிப்படையில் மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த பயிற்சியை அளித்துவருகின்றனர். ஆரோவில்லில் சேவை, வர்த்தகம் என்ற பிரிவில் வர்த்தகத்தில் சி3ஸ்ட்ரீம்' செயல்பட்டுவருகிறது.

ஏழைகள் அறிவியல் கல்வியை எளிதில் பெறும் வகையில் ஆரோவில் சையர் சார்பில் இடையஞ்சாவடியில் உதவி பள்ளி வளாகம் செயல்பட்டுவருகிறது. அந்த பள்ளி வளாகத்தில்தான் ஸ்ட்ரீம் ஆய்வு மையமும் செயல்படுகிறது. அதில் கணினி மென்பொருள் உருவாக்கம், சிப் லேவுட் வடிவமைப்பு, டிரைவ்வர் டெவலப் ஆகிய ஆய்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றன. இயந்திரவியல் உருவாக்க அடிப்படையில் நுண்ணறிவு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

அதன்படி, மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான கணினி மென்பொருள்கள் உருவாக்கப்பட்டு பெங்களூரு போன்ற இடங்களில் உள்ள நிறுவனங்களுக்கு அந்தத் தொழில்நுட்பம் விநியோகிக்கப்பட்டுவருகிறது. தற்போது சிப் தொழில்நுட்பமே உலக அளவில் பிரபலமாகி வருகிறது.

ட்ரோன் முதல் கைபேசி, டேட்டா சேவை,ஷேர்மார்க்கெட்டிங் எனஅனைத்து நிலைகளிலும் சிப் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால், அதுகுறித்த ஆய்வு முக்கிய இடத்தை வகிக்கிறது.

கைப்பேசியில் தற்போதைய முன்னேறிய அலைவரிசையான 4 ஜி, 5 ஜி ஆகிய அலைவரிசை எண் அடங்கிய சிப் தயாரிப்பில் ஆரோவில் ஸ்டெம்லேண்ட் தொழில்நுட்பப்பிரிவு முக்கிய இடத்தை வகிக்கிறது.

இதுதவிர முப்பரிமாண அச்சு பட உருவாக்கம், வீட்டு உபயோகப் பொருள்களான மிக்ஸி, கிரைண்டர், மின்சாதனப் பொருள்கள் உருவாக்கத் தொழில்நுட்பம், பழுதுநீக்கும் தொழில்நுட்பம் என பல அறிவியல் சார்ந்த கல்வி கற்றுத் தரப்படுகிறது. இயற்கையைப் பாதுகாக்கும் நவீனத் தொழில்நுட்பம் என்ற அடிப்படையிலே ஆரோவில் அறிவியல் ஆய்வை செயல்படுத்தி வருங்காலச் சந்ததிக்கும் அதை கற்றுத்தருகிறது. அதன்படி மின்னணு சாதனங்களுக்கான சார்ஜர் தயாரிப்பு தொழில்நுட்பத்தை பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பை முடித்தவர்கள் கற்றுவருகிறார்கள்.

ட்ரோன் உருவாக்கம், அதை கட்டுப்படுத்துதல், ஆக்கபூர்வமானவற்றுக்கு அவற்றின் பயன்பாடு ஆகியவற்றை இளம்தலைமுறையினர் அறியும் வகையில் பத்து நாள் பயிற்சித் திட்டமும் ஸ்டெம்லேண்ட் சார்பில் செயல்படுத்தப்பட்டுவருகிறது'' என்கிறார் அமர்நாத்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com