நல்ல பழக்கத்தை எப்படி வழக்கமாக்கிக் கொள்வது?

'சித்திரமும் கைப்பழக்கம்.. செந்தமிழும் நாப்பழக்கம்' என்பது பழமொழி.
நல்ல பழக்கத்தை எப்படி வழக்கமாக்கிக் கொள்வது?
Published on
Updated on
1 min read

'சித்திரமும் கைப்பழக்கம்.. செந்தமிழும் நாப்பழக்கம்' என்பது பழமொழி. போட்டி அதிகரித்துவிட்ட இந்தக் காலகட்டத்தில் மனிதர்கள் முன்னேற நல்ல பழக்கம் மிகவும் இன்றியமையாதது.

'இதை எப்படி வளர்ப்பது?' என்ற சிந்தனை வந்துவிட்டாலே நாம் முன்னேறப் போகிறோம்; புதிதாக ஒரு திறனை அதிகரித்துக் கொள்ளப் போகிறோம் என்று அர்த்தம். 21 நாள்களில் ஒரு புதிய பழக்கத்தைப் பழகிக் கொள்ளலாம் என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

இந்தக் கருத்து எப்படித் தோன்றியது?

1950-களில் மால்ட்ஸ் என்ற அறுவைச் சிகிச்சை நிபுணர் தன்னிடம் சிகிச்சை பெற வந்தோரைக் கவனிக்க ஆரம்பித்தார். அவர்கள் 21 நாள்களில் பிளாஸ்டிக் சர்ஜரியினால் உருவாக்கப்பட்ட தனது புதிய முகத்தை அல்லது அங்கத்தில் உண்டான மாற்றத்தை ஏற்றுக் கொள்கிறார்கள் என்று அவர் கண்டறிந்தார்.

'சில அங்கங்கள் உடலுடன் ஒன்ற 21 நாள்கள் ஆகின்றன. 'இந்த அனுபவத்தால், ஒரு பழக்கம் வேரூன்ற 21 நாள்கள் ஆகின்றன' என்று அவர் கூறினார். இதுவே இன்றளவும் எங்கும் கூறப்பட்டு வருகிறது.

'ஒரு பழக்கத்தை ஒருவர் மேற்கொள்ள சராசரியாக 66 நாள்கள் ஆகின்றன. அதுவே இயல்பான பழக்கமாக ஒருவரிடம் ஆக 18 முதல் 254 நாள்களாகும்' என்பதை ஆராய்ச்சி ஒன்று உறுதிப் படுத்துகிறது.

'சிகரெட் பிடிப்பதைவிட வேண்டும்', 'மது அருந்துவதை விட வேண்டும்' என்பன உள்ளிட்ட ஏராளமான நல்ல சிந்தனைகள் ஒருவருக்கு ஏற்படுவது இயல்புதான். ஒரே நாளில் நீக்கிவிட வேண்டும் என்ற முனைப்பை விட்டுவிட்டு சிறிது சிறிதாக படிப்படியாகப் பிடிக்கும் சிகரெட்டுகளின் அளவையும் மது அருந்துவதன் அளவையும் குறைப்பது முதல் படியாகும். சுலபமானதும்கூட!

500 வார்த்தைகள் உள்ள கட்டுரையை ஒரேயடியாக எழுதாமல் ஒரு நாளைக்கு நூறு முதல் நூற்றைம்பது வார்த்தைகள் எழுதினால் கட்டுரை அருமையாகப் பூர்த்தியாகும். ஒரு மாதத்தில் பல நல்ல கட்டுரைகளை எழுதி விடலாம்.

ஜேம்ஸ் க்ளியர் எழுதியுள்ள தனது 'அடாமிக் ஹாபிட்ஸ்' என்ற புத்தகத்தில், 'சிறிய பழக்கங்கள் பெரிய மாற்றத்தைத் தரும், லட்சியத்தைவிட உங்கள் அமைப்பின் மீது கவனம் செலுத்துங்கள், உங்களை அடையாளப்படுத்தும் பழக்கங்களை முதலில் வளர்த்துக் கொள்ளுங்கள்' ஆகிய மூன்று அறிவுரைகளைக் கூறுகிறார்.

'ஒரு பழக்கம், வெளிப்படையாக வாழ்க்கையின் ஒரு அங்கமாக அது இருக்க வேண்டும். மிகவும் கவர்ச்சிகரமாக இருக்க வேண்டும். சுலபமாக இருக்க வேண்டும். திருப்தியைத் தர வேண்டும்' என்பது அவர் யோசனை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com