பயங்கரவாதத்துக்கு எதிராக, ஆப்பிள் நிறுவனம் நடவடிக்கைகளை எடுக்க உதவிய இந்திய வம்சாவளிப் பெண் கல்யாணி ராமதுர்கம், ஃபோர்ப்ஸ் 'முப்பது வயதுக்குள்பட்ட 30 பிரபலங்கள்' பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.
கணினித் தொழில்நுட்ப வல்லுநரான இவர், தொடக்கத்தில் ஸ்டார்ட் அப் ஒன்றைத் தொடங்கினார். பின்னர் ஆப்பிள் நிறுவனத்தில் தொழில் புரியத் தொடங்கியுள்ளார். கோபால்ட் லேப்ஸ் நிறுவனத்தின் இந்திய வம்சாவளி இணை நிறுவனரான கல்யாணி, மென்பொருள் பொறியாளரான ஆஷி அகர்வாலுடன் இணைந்து, ஃபோர்ப்ஸ் 30 வயதுக்கு உள்ட்ட 30 பிரபலங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
நிதித் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவுத் துறையில் பணியாற்றிவரும் இவரது பங்கு ஆப்பிள் நிறுவனத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. பயங்கரவாதிகள் பணப் பரிவர்த்தனையில் பண மோசடி செய்வதற்கு 'ஆப்பிள் பே'
செயலி தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதில் கல்யாணி கவனம் செலுத்திவந்தார். இணைய இணைப்புகளில் மெதுவாகச் செயல்படும் தொழில்நுட்பங்கள், காலாவதியான செயல்முறைகள் நடைமுறையில் இருப்பதை அவர் கண்டுபிடித்தார்.
தொழில்நுட்பங்களை மேம்படுத்தவும், மதிப்பாய்வு செய்து அபாயங்களைத் தவிர்க்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை கல்யாணி எடுத்தார். அதனால் பல சிக்கல்கள், குழப்பங்களுக்குத் தீர்வு கிடைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.