எழுபத்து மூன்று வயதாகும் சுசில் மெக்ரா, 1969-ஆம் ஆண்டு பள்ளியில் படித்த போது ஒரு கண்காட்சிக்குச் சென்றார். அப்போது அவர் வாங்கிய தபால் தலைகள் அவரைப் பிற்காலத்தில் மிகப் பெரிய தபால்தலை மற்றும் உறைகளை சேகரிப்பதில் விற்பன்னராக மாற்றியது.
கர்நாடக தபால் தலை சங்கத்தின் முன்னாள் தலைவரான இவரிடம் 10000-க்கும் மேற்பட்ட தபால் தலைகள் மற்றும் 1000 அஞ்சல் பட அட்டைகள் உள்ளன. அவை 20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆரம்பித்து, இன்று வரை பல கதைகளைச் சொல்கின்றன.
சுதந்திரத்துக்குப் பிந்தைய அனைத்து இந்திய தபால் தலைகள், திலகர் நூற்றாண்டு தபால் தலை, பிரிட்டிஷ் இந்தியாவின் பட அஞ்சல் அட்டைகள், மீட்டர் பிராங்க் என்னும் அச்சிடப்பட்ட முத்திரைகள் எனப் பல அவரிடம் உள்ளன.
இந்தப் பொருள்கள் தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் ஜெர்மனியில் நடைபெற்ற கண்காட்சிகளில் இடம்பெற்று பாராட்டைப் பெற்றன. கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த ஆஸ்திரேலிய மெய்நகர் தபால் தலை கண்காட்சியில் அவர் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
1975 -ஆம் ஆண்டு, நமது முதல் செயற்கைக் கோளான ஆரியபட்டா ஏவப்பட்டது முதல் தற்போதைய சந்திரயான் வரை இந்திய விண்வெளி பயணத்தை ஆவணப்படுத்தும் தபால் தலைகள் மற்றும் அட்டைப் படங்களின் தொகுப்பையும் சேகரித்து வைத்துள்ளார்.
இவருடைய தபால் தலை ஆல்பங்கள் பல கதைகளைச் சொல்கின்றன. வெளிநாட்டு தபால் தலைகளையும் சேகரித்து வைத்துள்ளார். இவர் வன்பொருள் மற்றும் வண்ணப்பூச்சு தூரிகைகள் தயாரிப்பாளரும்கூட. இவருடைய தபால் தலை, கடை பெங்களூரு பொம்மணஹள்ளி மங்கம்மா பாளையாவில் உள்ளது.
-கிருஷ்ணன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.