வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

பிஃபா உலகக் கோப்பை கால்பந்துத் திருவிழா - முழு விவரம்!

கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 12-இல் மெக்ஸிகோவில் தொடங்க உள்ளது.

News image
Updated On :7 ஜூன் 2026, 4:00 am IST

கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 12-இல் மெக்ஸிகோவில் கோலாகலமாகத் தொடங்க உள்ளது. வட அமெரிக்க கண்டத்தில் உள்ள அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ நாடுகள் முதன்முறையாக இணைந்து, 2026-ஆம் ஆண்டில் போட்டியை நடத்த உள்ளன. மூன்று நாடுகளில் இருந்து 16 நகரங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

கால்பந்து, டென்னிஸ், ஹாக்கி, கிரிக்கெட், கூடைப்பந்து, வாலிபால் போன்ற விளையாட்டுகள் உலக அளவில் பிரபலமானவையாக உள்ளன. இவற்றில் அதிக ரசிகர்களைக் கொண்ட விளையாட்டாக கால்பந்து திகழ்கிறது. உலகின் அனைத்துப் பகுதிகளிலும் விரும்பி ஆடப்படும் ஆட்டம் கால்பந்தாகும். சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) கால்பந்து ஆட்டத்தை நிர்வகித்து வருகிறது. உலகின் பணக்கார விளையாட்டு அமைப்புகளில் பிஃபாவும் முக்கியமானதாகும்.

முதல் உலகக் கோப்பை: 1930-இல் முதலாவது உலகக் கோப்பை போட்டி உருகுவேயில் நடைபெற்றது. தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்தப் போட்டி 1942, 1946-ஆம் ஆண்டுகளில் உலகப் போர்கள் காரணமாக நடைபெறவில்லை.

நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா

இறுதியாக கத்தாரில் 2022-இல் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டி இறுதியில் பிரான்ஸை வீழ்த்தி, ஆர்ஜென்டீனா மூன்றாவது முறையாக சாம்பியன் ஆனது. கேப்டன் மெஸ்ஸி தலைமையிலான அணி சிறப்பாக ஆடி பட்டத்தைக் கைப்பற்றியது.

முட்டி மோதும் அணிகள்:

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தகுதி பெற்று ஆடுவது என்பது மிகவும் கெளரவமிக்கதாகும். கண்டங்கள் வாரியாக கடினமான தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடத்தப்பட்டு, இறுதியாக உலகக் கோப்பையில் ஆடும் அணிகள் தகுதி பெறும். ஒவ்வொரு கண்டம் வாரியாக அணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

1930-இல் வெறும் 13 அணிகள் களம் கண்டன. 1934 முதல் 1978 வரை 16 அணிகளாக இருந்த நிலையில், 1982-இல் 24 அணிகளாக அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து 1998-இல் 32 அணிகளாக உயர்த்தப்பட்டன. 2022 உலகக் கோப்பை வரை மொத்தம் 32 நாடுகளே தகுதி பெற்று ஆடி வந்தன. பல்வேறு கண்டங்களுக்கும் அதிக வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக, 2026 உலகக் கோப்பை போட்டியில் மொத்த அணிகள் எண்ணிக்கை 48-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசியா, ஆப்பிரிக்க கண்டங்களில் இருந்து கூடுதல் அணிகள் ஆடும் வாய்ப்பைப் பெற்றுள்ளன.

இதுவரை சாம்பியன்கள்:

அதிகபட்சமாக பிரேஸில் 5 முறை, ஜெர்மனி, இத்தாலி 4 முறை, ஆர்ஜென்டீனா 3 முறை, பிரான்ஸ், உருகுவே 2 முறை, இங்கிலாந்து, மற்றும் ஸ்பெயின் ஒருமுறை. 18 நாடுகள் இதுவரை உலகக் கோப்பை போட்டிகளை நடத்தி உள்ளன. கடைசியாக 2022-இல் கத்தார் போட்டியை நடத்தியது.

அதிக பார்வையாளர்கள் சாதனை:

உலக அளவில் அதிக பார்வையாளர்கள் கண்டுகளித்த போட்டியாக உலகக் கோப்பை கால்பந்து உள்ளது. கடந்த 2018-இல் ரஷியாவில் நடைபெற்ற போட்டியை 3.57 பில்லியன் பேர் (உலக மக்கள் தொகையில் பாதி) கண்டுகளித்தனர். கத்தாரில் கடந்த 2022-இல் நடைபெற்ற போட்டியின் இறுதி ஆட்டத்தை மட்டுமே 1.5 பில்லியன் பேர் ரசித்தனர்.

அதிக கோலடித்த வீரர்கள்:

எம் க்ளோஸ், ஜெர்மனி 16, ரொனால்டோ, பிரேஸில் 15, ஜெர்ட் முல்லர், ஜெர்மனி 14, ஜஸ்ட் பொன்டேன், பிரான்ஸ் 13, மெஸ்ஸி, ஆர்ஜென்டீனா 13, எம்பாப்பே, பிரான்ஸ், பிலே, பிரேஸில் தலா 12.

Story image

மெக்ஸிகோவுக்கு சிறப்பு:

3 முறை உலகக் கோப்பை போட்டியை நடத்திய ஒரே நாடு என்ற பெருமையை மெக்ஸிகோ பெற்றுள்ளது. 1970-இல் முதல் உலகக் கோப்பையும், 1986-இல் இரண்டாவது உலகக் கோப்பையும், தற்போது 2026-இல் மூன்றாவது முறையாக மெக்ஸிகோவிலும் போட்டி நடைபெறுகிறது.

முதல் ஆட்டம்: ஜூன் 12: மெக்ஸிகோ-தென்னாப்பிரிக்கா, மெக்ஸிகோ சிட்டி அரையிறுதி, இறுதி ஆட்டங்கள்:

முதல் அரையிறுதி: ஜூலை 15, ஆர்லிங்டன்

இரண்டாவது அரையிறுதி: ஜூலை 16, அட்லாண்டா

மூன்றாம் இடத்துக்கான ஆட்டம்: ஜூலை 19, மியாமி

இறுதி ஆட்டம்: ஜூலை 20, நியூயார்க்.

அணிகள்: குரூப்கள்:

குரூப் ஏ: மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்கா, கொரிய குடியரசு, செக். குடியரசு

குரூப் பி: கனடா, போஸ்னியா, கத்தார், சுவிட்சர்லாந்து

குரூப் சி: பிரேஸில், மொராக்கோ, ஹைதி, ஸ்காட்லாந்து

குரூப் டி: யுஎஸ்ஏ, பராகுவே, ஆஸ்திரேலியா, துருக்கி

குரூப் இ: ஜெர்மனி, கியுரகோ, ஐவரி கோஸ்ட், ஈக்வடார்

குரூப் எஃப்: நெதர்லாந்து, ஜப்பான், ஸ்வீடன், துனிசியா

குரூப் ஜி: பெல்ஜியம், எகிப்து, ஈரான், நியூஸிலாந்து

குரூப் ஹெச்: ஸ்பெயின், கேப் வர்டே, சவுதி அரேபியா, உருகுவே

குரூப் ஐ: பிரான்ஸ், செனகல், ஈராக், நார்வே

குரூப் ஜே: ஆர்ஜென்டீனா, அல்ஜீரியா, ஆஸ்திரியா, ஜோர்டான்

குரூப் கே: போர்ச்சுகல், டிஆர் காங்கோ, உஸ்பெகிஸ்தான், கொலம்பியா

குரூப் எல்: இங்கிலாந்து, குரோஷியா, கானா, பனாமா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.